காட்பாடி அருகே போலி பெண் மருத்துவர் கைது

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் கடந்த சில ஆண்டுகளாக விஜயகுமாரி (47) என்ற பெண் பொதுமக்களுக்கு மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்து உள்ளார்.தகவல் அறிந்த சுகாதார துறையினர் வருவாய்துறை மற்றும் காவல்துறையுடன் இணைந்து அதிரடியாக விஜயகுமாரியை கைது செய்து அவருடைய கிளினிக்கு வட்டாட்சியர் பாலமுருகன் முன்னிலையில் சீல் வைத்தனர்.

கே.எம்.வாரியார் வேலூர்