இராஜபாளையத்தில் இரண்டு மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் மாலை நேரத்தில் கருமேகம் சூழ்ந்த நிலையில் தளவாய்புரம் , கிருஷ்ணாபுரம், தென்றல் நகர் ,திருவள்ளுவர் நகர் ,இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை இரண்டு மணி நேரம் பெய்ததுஇராஜபாளையம் நகர் பகுதிகளில் பாதாள சாக்கடை, தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்துக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவரா மூடாத நிலையில் மழைநீர் ஆங்காங்கே தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர் பழைய பேருந்து நிலையம் சுற்றி முழுவதும் கழிவுநீர் தேங்கியுள்ளது நகராட்சி நிர்வாகம் சார்பில் தோண்டப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் மற்றும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திற்க்காக தோண்டிய குழிகளை சரிவர மூடாமல் மற்றும் கழிவு நீர் செல்ல வழியில்லாததால் இது போன்று தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் , பாதசாரிகள் மிகவும் அவதி அடைந்தனர் பெரும் விபத்துக்கள் ஏற்படும் முன்பு நகராட்சி நிர்வாகம் தோண்டப்பட்ட குழிகளை சரியாக மூட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

.செய்தியாளர் வி காளமேகம்