திருப்பரங்குன்றம் அருகே திருநகர் தனியார் உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா

திருப்பரங்குன்றம் அருகே திருநகர் தனியார் உடற்பயிற்சி கூடம் திறப்பு விழாவிற்கு வருகை தந்த விருதுநகர் எம்பி மாணிக் தாகூர் செய்தியாளர் சந்திப்பு திருமங்கலத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் உதயகுமார் வருங்கால முதல்வரே என கோஷம் எழுப்பியது குறித்த கேள்விக்குஇப்பொழுது அதிமுகவில் பலரும் முதல்வராகும் கனவில் உள்ளனர் அதனை எதிர்பார்த்து இந்த நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது.எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்டு ஜெயலலிதா அவர்களால் திர்மானிக்கப்பட்ட அதிமுக கட்சியை எடப்பாடி பழனிச்சாமி அழித்து கொண்டிருக்கிறார்.அதிமுகவின் கடைசி முதல்வர் என்று நிலைக்கு கொண்டு செல்கிறார் எடப்பாடி பழனிச்சாமியின் மக்கள் விரோத செயல்கள் அனைத்தையும் செய்வதால் அதிமுகவின் கடைசி முதல்வர் எடப்பாடி பழனிசாமிதிருமாவளவன் மனுதர்மம் குறித்த செய்திக்குமனுதர்மம் பற்றி கூறியதை பாஜகவினர் பலர் திரைத்துறையில் இருப்பதால் அழகாக எடிட் செய்துள்ளனர் இதுகுறித்து அண்ணன் காங்கிரஸ் தலைவர் அழகிரி அவர்கள் தெளிவாக கூறியிருக்கிறார் திருமாவளவன் கூறிய கருத்தை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறினார் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் |ராகுல்காந்தி தலையிடுவாரா என்று நிர்மல சீதாராமன் கேட்ட கேள்விக்கு ?காங்கிரஸ் மட்டுமல்ல இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து ராகுல் காந்தி தனது சகோதரிகள், தாய்மார்கள் போன்று நினைத்து செயல்படுகிறார்..ஆனால் உத்தரபிரதேச மட்டுமல்ல பஞ்சாப் இருந்தாலும் அதில் நேரடியாக சென்று விடுவார் .உத்திரப்பிரதேசத்தில் காவல்துறையே பெண்ணின் உடலை எரித்து உள்ளது இது குறித்து நியாயம் கேட்கிறார் பஞ்சாபில் நடந்த சம்பவம் வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்ட