Home செய்திகள் மதுரையில் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தானாக முன்வந்து வழக்காக விசாரிக்க உள்ளது.

மதுரையில் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தானாக முன்வந்து வழக்காக விசாரிக்க உள்ளது.

by mohan

கொரோனா பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படுவதில் ஏற்படும் தாமதத்திற்கு என்ன காரணம்? என்பது போன்ற வினாக்கள் மனுவில் கேட்கப்பட்டுள்ளன.உயர்நீதிமன்ற மதுரை கிளையின் பதிவாளர் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,” மதுரையில் தீவிரமாக நோய்த்தொற்று பரவி வரும் சூழலில் கொரோனோ பரிசோதனை முடிவுகள் வெளியிடப்படுவதில் தாமதம் ஏற்படுவதாகவும், தாமதத்தின் காரணமாக நோய்த் தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் நாளிதழ்களில் செய்தி வெளியாகி உள்ளது. அதனடிப்படையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தானாக முன்வந்து இதனைவழக்காக பதிவு செய்கிறது.

1. கொரோனா நோய்த்தொற்று பரிசோதனைகளை சுழற்சி முறையில் மேற்கொள்ளவும், துரிதமாக சோதனைகளை முடிக்கவும், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் தயாராக உள்ளனரா? பிசிஆர் பரிசோதனை கருவிகள் உள்ளனவா?

2. கொரோனா பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படுவதில் ஏற்படும் தாமதத்திற்கு என்ன காரணம்?

3. கொரோனா தோற்றால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்வது அல்லது எரியூட்டுவதற்காக என்ன வசதி செய்யப்பட்டுள்ளது?

என்பது போன்ற வினாக்கள் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!