
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஹார்விபட்டி பூங்கா அருகே உள்ள மின் கம்பம் ஒன்று உள்ளது. இதில் இரவு ஜல்லிக்கட்டு இறக்கிவிட்டு டிப்பர் லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. ஓட்டுநரின் அலட்சியத்தால் டிப்பர் லாரி பின் கதவை மூடாமல் திறந்த வாரே வந்துள்ளது. ஹார்விபட்டி பூங்கா அருகே வரும் பொழுது லாரியின் பின் கதவை சாலையிலுள்ள மின்கம்பத்தின் மீது பலமாக மோதியது. இதில் மின்கம்பம் மோதிய வேகத்தில் முறிந்து விழுந்தது .இதனால் மின்கம்பம் முற்றிலும் சேதமடைந்தது. உடனடியாக மதுரை திருப்பரங்குன்றம் மின்வாரிய அதிகாரிகளுக்கு மற்றும் திருநகர் காவல் துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக மின் இணைப்பை துண்டித்து தற்காலிகமாக அதில் உள்ள உயர்மின் வயர்களை மாற்று மின் கம்பத்தில் வைத்தார்கள். எனினும் லாரியில் சிக்கியுள்ள மின் மின் வயர்களை அகற்ற முடியவில்லை.காலை வரையில் மின் வயர்கள் லாரியில் சிக்கி இருந்துகொண்டிருக்கிறது தற்போதுவரை இதனால் அப்பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சாரம் இல்லாமல் தடைபட்டது ..ஓட்டுநரின் அலட்சியத்தால் மின்கம்பம் உடைந்தது எனினும் மின்வாரிய ஊழியர்களின் துரித செயல்பாட்டால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது .இதுகுறித்து திரு நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.