Home செய்திகள் முதல்முறையாக பக்தர்கள் இன்றி மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்றது.

முதல்முறையாக பக்தர்கள் இன்றி மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்றது.

by mohan

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் வரலாற்றிலேயே முதல் முறையாக பக்தர்கள் இன்றி எளிய முறையில் நடைபெற்றது.கரோனா வைரஸ் தொற்று பரவலின் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் வரலாற்றிலேயே முதல்முறையாக பக்தர்கள் யாருமின்றி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மிக எளிய முறையில் நடைபெற்றது.ஒவ்வொரு ஆண்டும் சித்திரைப் பெருந் திருவிழா பல லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் மதுரையில் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.கொடியேற்றம் நடைபெற்று 10-ம் நாளில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் மீனாட்சி திருக்கோவிலில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமியும், பவளக்கனிவாய்ப் பெருமாளும் காலை 6 மணிக்கு மீனாட்சி கோவிலில் எழுந்தருள்வர். முன்பாக அதிகாலை 4 மணிக்கு அழகர்சாமி நாயுடு, சூறாவளி சுப்பையய்யர், கல்யாண சுந்தர முதலியார் மண்டபகப்படிகளில் அம்மனும் சுவாமியும் எழுந்தருளி, சித்திரை வீதிகள் சுற்றி வருவர். பிறகு முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.

திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளும் அம்மன் மற்றும் சுவாமிக்கு காலை 9.05 மணியிலிருந்து 9.29க்குள் மிதுன லக்னத்தில் திருக்கல்யாண வைபவம் சீரும் சிறப்போடும் சிவாச்சாரியார்களால் நடத்தப்படும். அச்சமயம் திருக்கல்யாண மண்டபத்தில் அமர்ந்திருக்கும் பெண்கள் புது தாலிக்கயிறு கட்டிக் கொள்வர்.

கொரானா எதிரொலியால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக சிவாச்சாரியார்கள் மட்டுமே பங்கேற்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை நடத்தினர்.பக்தர்களின் ஆத்ம திருப்திக்காக நடைபெறும் திருக்கல்யாண நிகழ்வு பொதுமக்களுக்கு கோவில் இணையதளம் மூலமாக நேரடி ஒளிபரப்புச் செய்யப்படும் என்று அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் நிர்வாகம் அறிவித்தது.

சார்வரி வருடம் சித்திரைப் பெருவிழா ஏப்ரல் 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தினமும் நடைபெறும் வைபவங்கள், சுவாமி திருவீதி உலாக்கள், பட்டாபிஷேகம், திக்கு விஜயம், திருக்கல்யாண உற்சவம் மற்றும் திருத்தேரோட்ட நிகழ்ச்சிகள் நடைபெறாது எனவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது

இந்நிலையில் அனைத்து பக்தர்களின் பிரார்த்தனையை நிறைவேற்றும் வகையிலும், பக்தர்களின் ஆத்ம திருப்திக்காவும், தலபுராணத்தின்படி, திருக்கல்யாண சம்பிரதாயங்கள் மட்டும் அன்றாடம் நடைபெறும். நித்திய பூஜைகளுடன் சேர்த்து இன்று (மே 4-ஆம் திங்கட்கிழமை) நாளை காலை 8 30 மணி முதல் 1. விக்னேஸ்வர பூஜை, 2.புண்யாக வாசனம், 3. பஞ்சகவியம், 4. பாலிகை பூஜை, 5. காப்பு கட்டுதல், 6. கலச பூஜை, 7. அக்னி காரியம், 8; சுவாமி அம்பாள் காப்பு கட்டுதல் 9. மாலை மாற்றுதல், 10. மங்கள நாண் அணிவித்தல் மற்றும் தீபாராதனை, 11. பொரி இடுதல், 12. பூர்ணா ஹூதி, 13. விசேஷ தீபாராதனை, 14. மந்திர புஷ்பம் சதுர்வேதம் பஞ்சபுராணம், 15. ஆசீர்வாதம் பிரசாதம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றது.

காலை 9.05 முதல் 9.29 மணிக்குள் சுவாமி சன்னதி முதல் பிரகாரத்தில் அமைந்துள்ள எப்பொழுதும் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளிய சேத்தி மண்டபத்தில் (உற்சவர் சன்னதி) நான்கு சிவாச்சாரியர்கள் மட்டும் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தி வைத்தார்கள்.இந்த நிகழ்ச்சிகள் அனைத்து பக்தர்களும் கண்டு பிரார்த்திக்கும் வகையில் திருக்கோயில் இணையதளம் www.maduraimeenakshi.org திருக்கல்யாண நிகழ்வினை நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி திருக்கல்யாண வைபவ உற்சவத்தின்போது ‘திருமாங்கல்ய மங்கல நாண்’ திருமணமான பெண்கள் புதிதாக அணிந்து கொள்வதான மரபு உள்ளது.தாய்மார்கள் காலை 9.05 மணி முதல் 9.29மணிக்குள் தங்கள் இல்லத்திலேயே பிரார்த்தித்து புதிய மங்கல நாண் மாற்றிக் கொள்ள உகந்த நேரம் எனவும் கோவில் நிர்வாகம் சார்பில் தொிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!