Home செய்திகள் திருப்பரங்குன்றத்தில் மர்மமான முறையில் குரங்குகள் உயிரிழப்பதால் நோய் தொற்று காரணமா

திருப்பரங்குன்றத்தில் மர்மமான முறையில் குரங்குகள் உயிரிழப்பதால் நோய் தொற்று காரணமா

by mohan

முதல்படை வீடான திருப்பரங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள தென்பரங்குன்றம் ஆகிய இடங்களில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட குரங்குகள் உள்ளன. இவை சுப்பிரமணியசுவாமி கோயில் , மலைக்கு போகும் பாதையில் உள்ள பழனியாண்டவர் கோயில், மலை மீது உள்ள காசி விசுவநாதர் கோயில், மலைக்கு பின்புறம் உள்ள கல்வெட்டு குடைவரை கோயில் ஆகிய இடங்களில் அதிகம் காணப்படுவது வழக்கம். பொதுவாக இங்கு வசிக்கும் குரஙகுகள் பக்தர்கள் வழங்கும் வாழைபழம், தேங்காய், புளியோதரை, பொங்கல் உள்ளிட்ட பிரசாதங்களை உணவாக உட்கொள்ளும். தற்போது கொரானா தொற்றால் பக்தர்கள் வருகை இல்லாததால் குரங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படுகின்றது. இதை சரிசெய்ய திருப்பரங்குன்றம் போலீஸ் மதன கலா இன்ஸ்பெக்டர் தலைமையில் இப்பகுதியை சேர்ந்த தன்னார்வலர்கள் பல்வேறு இடங்களில் பெறப்படும் வாழை, ஆரஞ்சு, ஆப்பிள், சப்போட்டா, பேரீச்சை போன்ற பழங்களையும் , டிரம்களில் தண்ணீரையும் இப்பகுதியில் உணவு இல்லாமல் தவிக்கும் குரங்குகளுக்கு வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இங்குள்ள குரங்குகளில் ஒரு குறிப்பிட்ட வயதுடைய குரங்குகள் தொடர்ச்சியாக மர்மமான முறையில் இறந்து கிடப்பதாகவும் இது குறித்து இப்பகுதி மக்கள் போலீசாருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் திருப்பரங்குன்றம் இன்ஸ்பெக்டர் மதனகலா வனத்துறைக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் வனத்துறையினர் இறந்த குரங்குகளை பிரேத பரிசோதனை செய்து பின்னர் அடக்கம் செய்தனர். இதுவரை இப்பகுதியில் 14 குரங்குகள் இறந்துள்ளன. தொடர்ச்சியாக குரங்குகள் மர்மமான முறையில் இறப்பதால் இப்பகுதி மக்களிடையே அச்சம் நிலவுகிறது. எனவே இது குறித்து வனத்துறை தக்க நடவடிக்கை எடுத்து குரங்குகளை காப்பாற்ற வேண்டும் மேலும் குரங்குகள் இறப்பதற்கு வேறு ஏதேனும் நோய் தொற்று காரணமா என்ற பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும். மேலும் இதனால் இந்த குரங்குகள் இறந்தது என பிரேத பரிசோதனை அறிக்கையும் வெளியிட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்களின் கோரிக்கையாகும் உள்ளது .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!