துபாயில் நடந்த மாரத்தான் போட்டியில் கீழக்கரை மற்றும் பல தமிழக இளைஞர்கள் கலந்து கொண்டனர்…வீடியோ..

துபாயில் ஸ்டேண்டர்ட் சாட்டர்ட் பேங்க் (Standard Chartered Bank) சார்பாக வருடந்தோரும் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி மாரத்தான் போட்டி நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த 2019 ஆண்டிற்கான 10 கி.மீ மாரத்தான் போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் கீழக்கரையை சார்ந்த மரைக்கா, சிஹாபுதீன், ஜீப்ரீ ஆகியோர் AG MELCO அணி சார்பாகவும், மதுரையில் இருந்து மார்டின் ரேமண்ட், தன்  ஐந்து வயது மகனுடன் கலந்து கொண்டு 10 கி.மீ தூரத்தை வெற்றிக்கரமாக நிறைவு செய்தனர் .இதில் கலந்து கொண்ட மொராக்கோ  நாட்டை சேர்ந்தவர் முதல் பரிசு வென்றார்.

விடுமுறை நாட்களில் வாட்ஸ அப், பேஸ் புக் மற்றும் நண்பர்களேடு நேரத்தை செலவளிக்கும் வேலையில் அரோக்கியத்தை ஊக்குவிக்கும் இது போன்ற போட்டிகளில் கலந்து கொள்வது பாராட்டுக்குறியது.

#Paid Promotion