xஇராமநாதபுரம் மாவட்டத்தில் 1,244 தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், 64 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 67 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 8,052 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் 60 சதவீத ஆசிரியர்கள் ஜன., 22 இல் துவங்கிய ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்நிலையில், மாணவர்கள் நலன் கருதி போராட்டத்தை விலக்கி கொண்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தது. நீதிமன்ற அறிவுறுத்தலை மீறி ராமநாதபுரத்தில் இன்று நடந்த ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் 65 சதவீதம் ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 849 பெண்கள் உட்பட 1,354 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இந்நிலையில், இராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிக்கு வராத அரசு பள்ளி ஆசிரியர்கள் 65 சதவீதம் பேரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளதாகவும், நாளை (ஜன., 26) பணிக்கு திரும்பவில்லையெனில் காலிப்பணியிடமாக அறிவிக்கப்பட்டு தற்காலிக ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர் என முதன்மை கல்வி அலுவலர் முருகன் தெரிவித்தார்.
செய்தி:- முருகன், இராமநாதபுரம்
You must be logged in to post a comment.