கீழக்கரையில் ஒரு புதிய மக்கள் நல அமைப்பு “மக்கள் இலவச சேவை மையம்”…

கீழக்கரையில் சமூக ஆர்வலர்களால் கடந்த வருடம் முதல் இதுநாள் வரை நடந்துவரும் இலவச மனு எழுதும் மையம் மேன்பாடு கூட்டம் கீழக்கரை நகராட்சி கூட்ட அரங்கில் சமூக பாதுகாப்பு தாசில்தார் K. M. தமீம் ராஜா தலைமையிலும் நகராட்சி ஆணையாளர் வசந்தி முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் புதிதாக வரவுள்ள தாலூகா அலுவலகத்தில் மின்வசதியுடன் கூடிய அறை ஒன்றை இலவச மனு எழுதும் மையத்துக்கு ஒதுக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. தாசில்தார் அக்கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளித்ததுடன், இப்பணிகளை ஓரு அமைப்பை உருவாக்கி இச்சேவையுடன் நில்லாமல் பொதுமக்கள் பயனளிக்கும் வகையில் எல்லாவித நற்காரியங்களுக்கும் அமைப்பு மூலம் செயலாற்ற வேண்டும் என்ற கருத்தை தாசில்தார் முன் வைத்தார். தாசில்தாரின் கருத்தை ” மக்கள் இலவச சேவை மையம். ” என்று ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டு கீழ் கண்ட நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஆலோசனைக் குழு:- கிருஷ்ண மூர்த்தி ( காங்கிரஸ் ) அப்துல் ஹமீது( SDPI ) முகம்மது சிராஜ்தீன் ( தமுமுக.)

தலைவர் : காதர் ( மக்கள் டீம் ) செயலாளர் : இஃப்திஹார் ஹசன். பொருளாளர் : சுந்தரம் ( அப்பா மெடிக்கல் ) துணை தலைவர் : ஹமீது சுல்த்தான் ( லாயர் )

இணை செயலாளர் : மணிகண்டன் Ex M.C . சாகுல் ஹமீது Ex M.C.

நிர்வாகஸ்த்தர்கள் : ஜெய்லுதீன் ( மூர் டிராவல்ஸ் ) ஹபீப் முகம்மது ( ம.ஜ.க.) சித்திக் (நிலா ஃபவுண்டேஷன்) சித்திக் அலி. காதர் ( SDPI ) ஆறுமுகம் ( வணிகர் சங்கம்.) பைசல்.( பாப்புலர் பிரண்ட்)

இந்ந அமைப்பு ஏற்படுத்தப்பட்ட நோக்கத்துடன் முழுமையாக செயல்பட கீழைநியூஸ் வோர்ல்ட் நிர்வாகமும் வாழ்த்துகிறது.

உதவிக்கரம் நீட்டுங்கள்..