இ சேவை மையமா?? இறந்த மையமா??

கீழக்கரை அரசு மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனம் சார்பாக ஈ சேவை மையம் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த ஒரு சேவையும் மக்களுக்கு கிடைக்காது. உதாரணமாக கடந்த டிசம்பர் மாதம் ஆதார் அட்டையை பிளாஸ்டிக் கார்டில் பிரிண்ட் செய்வதற்காக சென்றபோது சொன்ன பதில் பிரிண்டருக்கு ரிப்பன் இல்லை, மீண்டும் ஆறு மாதம் கழித்து நேற்று (05-07-2017) சென்ற போதும் ரிப்பன் இல்லை என்ற அலட்சியமான பதில்தான். ஆறு மாதமாகவா இல்லை என்று கேள்வி எழுப்பிய பொழுது, பதில் கூற தயார் இல்லை.

அம்மையத்தில் இருந்தே சம்பந்தப்பட்ட அதிகாரியை கீழை நியூஸ் சார்பாக தொடர்பு கொண்ட பொழுது, அவர் கூறிய பதில் ஆச்சரியம் தரக்கூடியதாக இருந்தது, அதாவது எல்லா வகையான பொருட்களும் இருப்பில் உள்ளது என்பதுதான், உடனே அங்கு வேலை செய்யும் ஊழியரிடம் அதிகாரியை இணைத்த பொழுது அந்த ஊழியர் முன்னுக்கு பின் முறனாக பதில் அளித்தார். இதன் மூலம் ஊழியர்களின் சோம்பேறி தனத்தால் ஈ சேவை மைய ஊழியர்கள் பொது மக்களை முட்டாள் ஆக்குகிறர்கள் என்பது மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும், அவ்வாறு செய்யும் பட்சத்தில் ஈ சேவை மையம் செயல்படும் மையமாக இருக்கும்.