Home செய்திகள்மாநில செய்திகள் மாபெரும் 35 வது சாலை பாதுகாப்பு மாத விழா விழிப்புணர்வு பேரணிமற்றும் கண் பரிசோதனை முகாம்..

மாபெரும் 35 வது சாலை பாதுகாப்பு மாத விழா விழிப்புணர்வு பேரணிமற்றும் கண் பரிசோதனை முகாம்..

by Askar

மாபெரும் 35 வது சாலை பாதுகாப்பு மாத விழா விழிப்புணர்வு பேரணி மற்றும் கண் பரிசோதனை முகாம்..

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 35 ஆவது சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா விழிப்புணர்வு பேரணி மற்றும் கண் பரிசோதனை முகாமை, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆ.ஆறுமுகம் , தலைமையேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்கள், பின்பு அவர் பேசும் போது; தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் சாலை பாதுகாப்பு மாதம் அறிவிக்கப்பட்டு அந்த மாதம் முழுவதும் மக்களுக்கு சாலை பாதுகாப்பு விழுப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி ,மதுரை மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையங்களில் சாலை விழுப்புணர்வு பேரணி நடத்தப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு பாதுகாப்பு குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மதுரை மண்டலத்தில் 890 பேருந்துகளில் 1.68 கோடி மகளிர்கள் கடந்த மாதத்தில் மட்டுமே பயணம் செய்துள்ளார்கள். 5.50 இலட்சம் மகளிர்கள் கட்டணமில்லா பேருந்தில் தினசரி பயணம் செய்கிறார்கள். திறன் மேம்பாட்டு சாதனம் மூலம் ஓட்டுநர்களின் திறன் அதிகரித்து விபத்து இல்லாமல் பேருந்துகளை இயக்க முடியும். ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு பயிற்சி மையத்தின் மூலம் மனவள கலை மற்றும் தியானப்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. பயணிகள், சாலை விதிகளை பின்பற்றி விபத்தில்லா மாவட்டத்தை உருவாக்க முழு ஒத்தழைப்பு வழங்க வேண்டும் என, பேசினார். இந்த பேரணியில், பாஸ்கரன் இணை இயக்குனர், சந்தானகிருஷ்ணன் மக்கள் தொடர்பு அலுவலர், ராமன், முதுநிலை துணை மேலாளர் , சமுத்திரம் பொது மேலாளர் தொழில்நுட்பம்- கூட்டாண்மை, யுவராஜ் உதவி மேலாளர் கூட்டான்மை வணிகத்துறை, நடராஜன், துணை மேலாளர் வணிகம், முருகானந்தம் துணை மேலாளர் தொழில்நுட்பம், தயாளகிருஷ்ணன் கோட்ட மேலாளர் (கிழக்கு), ஆறுமுகசாமி, உதவி மேலாளர் பயிற்சி மையம், கிளை மேலாளர்கள் (எல்லிஸ் நகர், பொன்மேனி மதுரை நகர் கிளை), சுந்தர் பொறியாளர் பாதுகாப்பு இயக்கம், ரமேஷ், உதவி பொறியாளர், பெரியார் பேருந்து நிலையம், ஆகியோர் கலந்து கொண்டனர். இப்பேரணியில், காவல்துறையினர், வாசன் கண் மருத்துவமனை அலுவலர்கள், ஓட்டுநர் பயிற்சி ஆசிரியர்கள், ஓட்டுநர்கள், பயணச்சீட்டு ஆய்வாளர்கள், ஐ. ஆர். டி. மாணவர்கள், மற்றும் அனைத்து பணியாளர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். பொதுமக்கள் மற்றும் பணியாளர்களுக்கு வாசன் கண் மருத்துவமனையின் சார்பில், இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!