Home செய்திகள்மாநில செய்திகள் அதிகாரிகள் அலட்சியத்தால் நீர்ப்பிடிப்பு பகுதியில் வீட்டு மனைகளாக மாறி வரும் நீர் பிடிப்பு பகுதிகள்.

அதிகாரிகள் அலட்சியத்தால் நீர்ப்பிடிப்பு பகுதியில் வீட்டு மனைகளாக மாறி வரும் நீர் பிடிப்பு பகுதிகள்.

by Askar

அதிகாரிகள் அலட்சியத்தால் நீர்ப்பிடிப்பு பகுதியில் வீட்டு மனைகளாக மாறி வரும் நீர் பிடிப்பு பகுதிகள்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட நிலையூர் கண்மாய் 700 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப் பெரிய கண்மாயாகும்.

இந்த நிலையில் தற்போது இந்த கண்மாயின் பரப்பளவு ஆக்கிரமிப்புகளால் சுருங்கி 400 ஏக்கர் பரப்பளவாக மாறிவிட்டதாக இப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நிலையூர் கண்மாய்க்கு ஆண்டுதோறும் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். ஆண்டு தோறும் தண்ணீர் திறந்து விடும்போதெல்லாம் கண்மாய் முழு கொள்ளளவை எட்டி விடும் இந்த கண்மாயை நம்பி 1500 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெற்று வருகிறது.

ஒரு கட்டத்தில் சாலை வரை தண்ணீர் நிரம்பி இருந்த நிலையில் நாளடைவில் சாலை ஓர இடங்கள் சிறிது சிறிதாக பட்டா நிலங்களாக மாற்றப்பட்டு வீட்டுமனைகளாக மாறியது.

தற்போது இந்த கணமாய் கரையின் ஓரத்தில் வணிக நிறுவனங்கள் உட்பட 2500க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளதால் நிலையூர் கண்மாய் நிரம்பியதும் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்து விடும்.

குறிப்பாக தனக்கன்குளம், திருநகர், அமைதிச்சோலை உள்ளிட்ட பகுதியில் வசிக்கக்கூடிய குடியிருப்பு வாசிகளின் வீடுகள் முழுவதும் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.

இந்த தண்ணீர் ஆனது ஆறு மாத காலம் வரை குடியிருப்பு பகுதிகளுக்கு இடையே இருப்பதால் இப்பகுதி குடியிருப்பு வாசிகள் வருடத்திற்கு ஆறு மாதம் வாடகை வீட்டில் தங்கும் சூழல் உருவாகியுள்ளது.

குடியிருப்பு வாசிகள் தங்களது பகுதிக்குள் தண்ணீர் புகுந்து விடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். ஆண்டுதோறும் கண்மாயில் தண்ணீர் நிரம்புவதால் பல லட்ச ரூபாய் செலவில் வீடு கட்டியும் வசிக்க முடியாத ஒரு நிலை உருவாகி உள்ளது.

எனவே., அரசு குடியிருப்புப் பகுதிகளை சுற்றி கரை அமைத்து தூர்வாரினால் கண்மாய் பாதிக்கப்படாமல், குடியிருப்பு பகுதிகளும் பாதிக்கப்படாமல் இருக்கும், மேலும்., நீர்ப்பிடிப்பு பகுதிகள் என்று தெரிந்தும் பட்டா வழங்கி வீடுகளுக்கு மின் இணைப்பு, குழாய் இணைப்பு, சாலை வசதி என அரசு அனைத்தும் வழங்கி இதுபோன்ற மழைக்காலங்களில் அல்லது கண்மாய் நிரம்பி குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகும் காலங்களில் அதிகாரிகளை சந்தித்தால் நீர்ப்பிடிப்பு பகுதி என அதிகாரிகள் தங்களை அவதியுற வைப்பதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இப்பகுதி வாசிகள் தெரிவிக்கின்றனர்.செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!