மதுரை மாநகராட்சியின் துணை மேயர் நாகராஜன் வீடு மற்றும் அலுவலகம் ஆகியவற்றை அடித்து நொறுக்கிய இரண்டு ரவுடிகள்..

மதுரை மாநகராட்சியின் துணை மேயர் நாகராஜன் வீடு மற்றும் அலுவலகம் ஆகியவற்றை அடித்து நொறுக்கிய இரண்டு ரவுடிகள்..

மதுரை மாநகராட்சியின் துணை மேயர் நாகராஜன் மதுரை ஜெய்ஹிந்த்புரம் நேதாஜி தெருவில் வசித்து வருகிறார்.

இந்தநிலையில் இன்று மாலை துணை மேயர் நாகராஜன் மற்றும் அவரது மனைவி செல்வராணி ஆகியோர் இல்லத்தில் இருந்தபோது, திடீரென வந்த மர்ம நபர்கள் இருவர் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வைத்து துணை மேயரின் வீட்டு வாசலில் இருந்த இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கியதோடு, மேலும் ஜெய்ஹிந்துபுரம் பிரதான சாலையில் உள்ள மாநகராட்சி துணை மேயரரின் அலுவலகம் முன்பக்க கண்ணாடிகள் முற்றிலுமாக அடித்து நொறுக்கப்பட்டது. இதனால் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜெய்ஹிந்த்புரம் போலீசார் துணை மேயர் வீட்டு வாசலில் ரகளையில் ஈடுபட்ட இருவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாநகராட்சியின் துணை மேயர் தனது மனைவியோடு வீட்டில் இருந்த நேரத்தில் பயங்கர ஆயுதங்களோடு வந்த மர்ம நபர்கள் இருவர் துணை மேயர் நாகராஜனின் வீடு மற்றும் அலுவலகத்தை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துணை மேயர் நாகராஜன் அலுவலகம் மற்றும் அவர் மீது கொலை வெறி தாக்குதல் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் தலைமையிலான கட்சியினர் நாளை மாலை ஜெய்ஹிந்த்புரம் வீரகாளியம்மன் கோவில் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர். செய்தியாளர், வி.காளமேகம்