கீழை நியூஸ் நிர்வாகம் சார்பாக கீழக்கிடாரம் பள்ளிக்கு பெண்கள் தொழுகை பள்ளிக்கான ஏற்பாடு..

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டத்தில் அமைந்திருக்கும் சிறிய கிராமம் கீழக்கிடாரம்.  இங்கு சுமார் 140கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  இங்கு 35வருட பழமையான தொழுகை பள்ளி அமைந்துள்ளது.  மேலும் இந்த ஜமாத்திற்கென தனிப்பட்ட வருமானம் ஏதும் கிடையாது.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கீழக்கரை நகர் நல இயக்கம் பஷீர் மரைக்கா மூலமாக அவ்வூரில் உள்ள பள்ளியில் பெண்களுக்கான தொழுகை நடத்த வசதி ஏற்படுத்த வேண்டும், அதற்கு சுமார் ₹.1,50,000/- தேவைப்படுவதாக தெரிவித்திருந்தனர்.

இதை கருத்தில் கொண்டு கீழை நியூஸ் நிர்வாகம் நண்பர்கள் மற்றும் நல்லுல்லங்களின் உதவியோடு தேவையான தொகையை ஏற்பாடு செய்து அப்பள்ளிவாசலின் கட்டுமான வேலைகளை முடித்துக் கொடுத்தனர்.  இத்தருணத்தில் இப்பள்ளி கட்டுமான பணியை மிகவும் குறைந்த காலத்தில் தரமாக கட்டி முடிக்க உதவிய கீழக்கரை முஜிபுர் ரஹ்மான், பஷீர் மரைக்கா மற்றும் இதற்கு பொருளாதார உதவி செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் கீழை நியூஸ் நிர்வாகம் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

மேலும் கீழை நியூஸ் நிர்வாகம் சார்பாக கடந்த ரமலான் மாதம் முழுவதும் நோன்பு கஞ்சிக்கான ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.