தொழில் முனைவோர் மாநாட்டில் ரய்யானுக்கு (SYNERGY GROUP) விருது…

பல்வேறு தொழில் துறையைச் சார்ந்தவர்கள் கலந்துகொண்டு பயனடைவதற்காக தமிழக தொழில் முனைவோருக்கான மாநாடு சைபா அமைப்பினரால் பிப்ரவரி 9 மற்றும் 10 அன்று திருச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த மாநாட்டில் ரய்யான் ஹஜ்,உம்ரா சர்வீஸ் நிறுவன சேவைக்காக *TNEEC 2019 விருது* வழங்கப்பட்டது. அந்த விருதினை ஜமால் முஹம்மது கல்லூரியின் தாளாளர், முதல்வர் மற்றும் MAM கல்லூரியின் தாளாளர் உள்ளிட்டவர்கள் வழங்க ரய்யானின் நிறுவன இயக்குநர் முனைவர் M.ஹுஸைன் பாஷா அவர்கள் பெற்றுக்கொண்டார்.

முன்னதாக, சினர்ஜி இண்டர்நேஷனல் குழுமத்தின் செயல்பாடுகளை விளக்கிய ஹுஸைன் பாஷா, மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் உற்சாகமடைவதற்காக சிறியதொரு பயிற்சியையும் அளித்து புத்துணர்ச்சியூட்டினார்.

m