Home செய்திகள் கொரணா பரிசோதனை முடிந்தவர்களை விரைந்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும்:-மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன்அன்சாரி MLA கோரிக்கை!

கொரணா பரிசோதனை முடிந்தவர்களை விரைந்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும்:-மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன்அன்சாரி MLA கோரிக்கை!

by Askar

கொரணா பரிசோதனை முடிந்தவர்களை விரைந்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும்:- மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன்அன்சாரி MLA கோரிக்கை!

கொரணா பரிசோதனை கிசிச்சை பெற்று நலன் பெற்றவர்கள் பலர் தங்களை இன்னும் ஏன் வீட்டுக்கு அனுப்பவில்லை? என கேட்கிறார்கள்.

முதல் பரிசோதனையில் ” பாசிட்டிவ் ” என ரிசல்ட் பெற்றவர்கள், கிசிச்சைக்கு பிறகு அடுத்த இரு சோதனைகளில் “நெகட்டிவ் ” என ரிசல்ட் பெறுகிறார்கள்.

அவர்களை போன்றோரை வீட்டுக்கு அனுப்பி இரண்டு வாரங்கள் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்பது வழிகாட்டலாக உள்ளது.

அத்தகைய பலர் 25 நாட்களை கடந்த பின்னாலும் எங்களை ஏன் வீட்டிற்கு அனுப்ப வில்லை? என கேட்கிறார்கள்.

ஏற்கனவே அவர்கள் உளவியல் சிக்கலில் இருக்கும் போது, அவர்களை மேலும் தாமதப்படுத்துவது உகந்ததல்ல.

எனவே, உரிய கிசிச்சைப் பெற்றவர்கள், தாமதமின்றி வீடு திரும்பவும், வீட்டிலேயே அடுத்த இரு வாரங்கள் தங்கி கண்காணிப்பில் இருக்கவும் தமிழக சுகாதாரத் துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி MLA., பொதுச் செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!