Home செய்திகள் வெள்ளம், புயல், ஜல்லிக்கட்டு என ரோட்டில் இறங்கி போராடிய நாம் இப்போது வீட்டுக்குள் இருந்தே போராடுவோம்:-நடிகர் சூர்யா வேண்டுகோள்..

வெள்ளம், புயல், ஜல்லிக்கட்டு என ரோட்டில் இறங்கி போராடிய நாம் இப்போது வீட்டுக்குள் இருந்தே போராடுவோம்:-நடிகர் சூர்யா வேண்டுகோள்..

by Askar

வெள்ளம், புயல், ஜல்லிக்கட்டு என ரோட்டில் இறங்கி போராடிய நாம் இப்போது வீட்டுக்குள் இருந்தே போராடுவோம்:-நடிகர் சூர்யா வேண்டுகோள்..

கொரோனா வைரஸ் நினைத்ததை விட வேகமாக பரவி வருகிறது. நாம் பரப்ப வேண்டிய ஒரே விஷயம் விழிப்புணர்வு மட்டும் தான். வெள்ளம், புயல், ஜல்லிக்கட்டு என ரோட்டில் இறங்கி போராடிய நாம் இப்போது வீட்டுக்குள் இருந்தே போராடுவோம்.

சீனாவை விட இத்தாலியில் கொரோனாவால் அதிகம் உயிரிழப்பு ஏற்பட்டதற்கு காரணம், அறியாமையில் வெளியில் சுற்றிய மக்கள் தான். இந்தியா இன்னொரு இத்தாலியாகி விடக் கூடாது.

ஒரு மனிதன் இன்னொரு மனிதனை விட்டு ஒரு மீட்டர் தொலைவாவது விலகியிருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். வெளியில் சென்று வந்தால் கை, கால்கள் கழுவ வேண்டும், தெரியாமல் கூட கழுவாத கைகளால் முகத்தைத் தொட்டுவிடக்கூடாது என்கிறார்கள்.

எல்லா இருமலும், காய்ச்சலும் கொரோனா கிடையாது. இருந்தாலும் 5 முதல் 6 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டு அதற்கு மேலும் அதே தொல்லை இருந்தால் மருத்துவரை அணுக சொல்கிறார்கள்.

மருத்துவமனை, வழிபாட்டுத் தலம், அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்பவர்கள் அத்தியாவசிய தேவை என்றால் மட்டுமே வெளியில் செல்ல வேண்டும். இல்லையெனில் போக வேண்டாம். கூட்டம் கூட்டமாக வெளியில் செல்ல இது வெக்கேஷன் டைம் அல்ல. பாதுகாப்பாக குடும்பத்துடன் இருக்க வேண்டிய நேரம்.

10 நாளில் 150-ஆக இருந்த பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 250-ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பதைப் பார்த்து அரசு அதிகாரிகளும், மருத்துவர்களும் வருத்தப்படுகிறார்கள்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் வெளியில் சென்றால் அவர்களை சுற்றியுள்ள அத்தனை பேரும் பாதிக்கப்படுவார்கள். அப்படி ஒரு மன்னிக்க முடியாத தவறை நீங்கள் செய்ய மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

நமக்காக மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், துப்புரவு தொழிலாளர்கள் தங்களுடைய உயிரை பணையம் வைத்து வெளியில் வேலை செய்கிறார்கள். அவர்களுக்காக நாம் வீட்டில் சுகாதாரமாக இருக்கலாமே.

அஞ்சுவது அஞ்சாமை பேதமை பயப்பட வேண்டிய விஷயத்துக்கு பயப்படாமல் இருப்பது முட்டாள் தனம் என்று சொல்வார்கள். இந்த விழிப்புணர்வை அனைவரிடமும் பரப்புங்கள். குறிப்பாக வயதானவர்களையும், குழந்தைகளையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்வோம்.

கொரோனா வைரஸைத் தடுக்க அடுத்த 2 வாரங்கள் மிக முக்கியமானது என்கிறார்கள். எச்சரிக்கையுடன் இருப்போம் வருமுன் காப்போம்..

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!