Home செய்திகள் இது பத்திரிகையாளர்களின் குரல்:- கவனிக்குமா அரசு??

இது பத்திரிகையாளர்களின் குரல்:- கவனிக்குமா அரசு??

by Askar

பள்ளிகளுக்கு விடுமுறை,சுபநிகழ்ச்சிகள் தள்ளிவைப்பு,ஷாப்பிங் மால்கள்,மாநில எல்லைகள் மூடல்,3 மாவட்டங்களுக்கு ‘சீல்’ மக்கள் வீடுகளில் முடக்கம்,ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள,கை கொடுக்க மக்களுக்கு பயம் இதெல்லாம் எதற்காக கொரோனா என்கிற கொடிய கிருமியை பரப்பி விடாமல் இருக்க,கண்ணுக்கு தெரியாத கிருமியை தடுத்து மக்களை காப்பாற்ற அரசு எடுக்கும் முயற்சிக்கு சுகாதாரத்துறை,உள்ளாட்சித்துறை அலுவலர்களின் தன்னலமற்ற சேவையை பாராட்ட வார்த்தைகள் இல்லை.சேவையாளர்களுக்கு பெரிய சல்யூட். அதே நேரத்தில் மாஸ்க் கூட இல்லாமல்,தன் கையை சுத்தப்படுத்திக் கொள்ள கிருமிநாசினி கூட கிடைக்காமல் மக்கள் படும் சிரமங்களை அரசுக்கும்,மக்கள் வீடுகளில் இருந்தவாறே வெளியில் நடக்கும் சம்பவங்களையும் தெரிந்துக் கொள்வதற்காக தன் உயிரை துச்சமென நினைத்து வீதியில் திரியும் செய்தியாளர்கள்,கேமரா மேன்களை பற்றி யாருக்கும் அக்கறையில்லை.அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது.அவர்களை பற்றி அவர்களது குடும்பத்தினருக்கு மட்டுமே கவலை இருக்கிறது. நாகையை சுனாமி புரட்டிப்போட்டப் போது மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேற பத்திரிகையாளர்கள் மட்டும் அடுத்து ஒரு சுனாமி வந்துவிட்டால் என்ன செய்வது என கடற்கரையில் முகாம்.ஒவ்வொரு முறை இயற்கை பேரிடர் காலங்களிலும் பாதிப்பு குறித்து உலகுக்கு எடுத்துரைக்க தன்னுயிரை பொருட்டாக நினைக்காமல் இரவு,பகல் பாராமல் சாலைகளில் இயற்கையோடு போராட்டம்.சுனாமி தாக்கியப்போது 3 நாட்கள் வரை உணவு கூட கிடைக்காமல் பசியோடு கடலோரத்தில் பாதிப்புகளை படமெடுக்க,விஷிவல் எடுக்க உயிருடன் போராட்டம் நடத்திய பத்திரிகையாளர்களின் நிலை எத்தனை பேருக்கு தெரியும் இது போன்ற காலங்களில் அரசுத்துறை அலுவலர்களுக்கு பாதுகாப்பான உடை,தேவையான வசதிகள் ஆனால் பத்திரிகையாளர்களின் நிலை.பசிக்கு சோறு,வறண்ட தொண்டைக்கு தண்ணீர் கூட கிடைக்காது என்பதே நிதர்சனம்.மக்களை காக்க மக்கள் ஊரடங்கு அமோக வெற்றி.இந்த நேரத்தில் வெளியூர்களில் இருந்து வந்திருந்து நாகையில் தங்கியிருக்கும் என் சக உறவுகளை நினைக்கும் போது மனம் கனக்கிறது.அரசு அலுவலர்கள் என்றால் அந்தந்த துறை சார்பில் அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யப்படும்.ஆனால் பத்திரிகையாளர்கள் நிலை. அரசுக்கும், மக்களுக்கும்,பத்திரிகையாளர்களுக்கும் பாலமாகவும்,பத்திரிகையாளர்கள் நலன்காக்கவும் செயல்பட வேண்டிய செய்தி மக்கள் தொடர்பு துறை இது போன்ற நேரங்களில் கூட மவுனம் காக்காமல்,குறைந்தபட்சம் பத்திரிகையாளர்களுக்கு மாஸ்க்,கிருமி நாசினி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து பத்திரிகையாளர்களின் எதிர்பார்ப்பு.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!