Home செய்திகள் கொரோனாவுக்கு மருந்து – மருந்து பாட்டிலுடன் கலெக்டர் அலுவலகம் வந்த ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவன்.

கொரோனாவுக்கு மருந்து – மருந்து பாட்டிலுடன் கலெக்டர் அலுவலகம் வந்த ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவன்.

by mohan

கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடித்து இருக்கிறேன் இதோ பாருங்க சார் என… திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் மருந்து பாட்டிலுடன் வந்திருந்தது அங்கு ஆச்சரியத்தையுப் பரபரப்பை ஏற்படுத்தியது . சீனாவில் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுஹனில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி சீனாவில் தொடர் உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்நாட்டிலிருந்து பரவிய இந்த வைரஸ் சுமார் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.தற்போது வரை இந்த காய்ச்சலுக்கு சீனாவில் மட்டும் 3900 பேர் உயிரிழந்துள்ளனர் . சுமார் ஒரு லச்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டேன் என திருப்பூரைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் கையில் மருந்து பாட்டிலுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தது அங்கிருந்தவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது .

அந்த மாணவரை விசாரித்ததில் திருப்பூர் செரீப் காலனி சேர்ந்த வெங்கடாசலம்- தங்கம் தம்பதியரின் மகன் இசக்கி ராஜ் (14 ) என்பதுடன் , திருப்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருவதாகவும் கூறினார் . தொடர்ந்து பேசிய அவர், சீனாவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரசால் மக்கள் கொத்துக்கொத்தாக உயிரிழப்பது கண்டு மனம் வேதனையுற்றது. மக்கள் உயிரிழப்பை என்னால் தாங்கி கொள்ள முடியாததால் அந்த வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என முடிவு செய்து தன் பாட்டியின் உதவியுடன் உள்ளூர் மூலிகைகளை பயன்படுத்தி மருந்து தயாரிக்க முடிவு செய்தேன். ஏற்கனவே மூலிகை விஷயங்கள் குறித்து ஓரளவிற்கு தான் தெரிந்து வைத்திருந்ததால் தன் பாட்டியின் ஆலோசனைப்படி கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளேன் என அவர் குறிப்பிட்டார்.

இந்த வைரஸ் பொதுவாக வாய் மற்றும் நாசித் துவாரத்தின் வழியாக பரவி சுவாசிக்க முடியாமல் செய்து உயிரிழப்பை ஏற்படுத்திவிடுகிறது . அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அது ஏற்படுத்துகிறது . ஆகவே இதே அடிப்படையாகக் கொண்டு அதற்கு ஏற்றவகையில் மருந்து தயாரித்துள்ளேன் . ஆகவே துளசி , நிலவேம்பு , தூதுவாளை , வேப்பிலை , பப்பாளி இலை , சஞ்சீவி வேர் , வெற்றிவேர் , உள்ளிட்ட 16 வகையான மூலிகைகளை வெயிலில் காயவைத்து அதை பொடியாக்கி அதை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி இந்த மருந்து தயாரித்திருக்கிறேன் இந்த மூலிகை சாப்பிடுவதன் மூலம் உடலில் வெள்ளை அணுக்கள் அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தி பெருகி வைரஸ் கிருமியை இது எதிர்க்கும் என அந்த மாணவர் ஆர்வத்தோடு தெரிவித்தார் . திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுவதால் இந்த மருந்துடன் வந்திருக்கிறேன் என்ற அவர் நாளை இந்த மருந்தை எடுத்துக்கொண்டு கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு ஆய்வு செய்யப் போகிறேன் என சிறுவன் உற்சாகமாக தெரிவித்தது அங்கிருந்த மக்களின் மத்தியில் பாராட்டை பெற்றது.

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!