ஒப்பிலானில் நடைபெற்ற மாபெரும் மின்னொளி கைப்பந்து போட்டியில் கீழக்கரை இளைஞர்கள் வெற்றி..

கடந்த சனிக்கிழமை (18-03-2017) அன்று ஒப்பிலானில் சைபுல் இஸ்லாம் நண்பர்கள் குழு சார்பாக மாநில அளவிளான மின்னொளி கைப்பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகம் மற்றும் பிற இடங்களில் இருந்தும் பல அணியினர் கலந்து கொண்டார்கள். இத்தொடர் போட்டிக்கு சிறப்பு பரிசு உட்பட மொத்தம் 10 பரிசுகள் வழங்கப்பட்டது.

இப்போட்டியின் இறுதியில் பனிமலர் அணி, முகம்மது பாய்ஸ் அணி, கேரளா அணி, உமர் ஃபிரண்ட்ஸ் அணி, கீழக்கரை அணி, சித்தார்கோட்டை அணி என முறையே முதல் ஆறு பரிசுகளை வென்றனர்.

நம் கீழக்கரை இளைஞர்கள் எத்தகைய போட்டியானாலும் வீரத்துடனும், உத்வேகத்துடன் கலந்து கொண்டு கீழக்கரைக்கு பெருமை சேர்ப்பது மிகவும் பாராட்டுதலுக்குரிய விசயம்.

தற்பொழுது முறையான வழிகாட்டுதலும், அடிப்படையான வசதியும் இல்லாத பட்சத்தில் வெற்றிகளை குவித்து வரும் நம் இளைஞர்களுக்கு, முறையான வசதிகளையும், உதவிகளையும், வாய்ப்புகளையும் உருவாக்கி தரும் பட்சத்தில் உலகளாவிய சாதனைகள் படைப்பார்கள் என்பதில் ஐயமில்லை. கீழை நியூஸ் நிர்வாகம் இவர்களுடைய சாதனைகளை மனமார பாராட்டுகிறது.