அமீரகத்தில் மழை மகிழ்ச்சியில் மக்கள்….

 

இன்று அமீரகத்தின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பொழிந்தது.

மழைக்காக ஏங்கும் அமீரக குடி மக்களுக்கு மிகுந்த மகிழ்சியை அளிக்கும் வகையில் அமைந்தது இந்த மழைப் பொழிவு.  மேலும் இந்த வருடம் மார்ச் இறுதி வரை குளிர் காலம் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இடியுடன் கூடிய மழையும், மேக மூட்டமும் இன்று முழுவதும் காணப்படும் என்றும், புதன் கிழமை வரை பலத்த காற்று வீசும் மற்றும் சீதோஷ்ன நிலை 15 முதல் 17 வரை குறைய வாய்ப்பு என அமீரக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.