கீழக்கரை தெருக்கள் மீண்டும் ஓளிருமா? நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க உறுதி..

கீழக்கரையில் கடந்த பல நாட்களாக தெரு விளக்குகள் எரியாமல் பாதசாரிகளும், அதிகாலையில் தொழுகைக்காக செல்லும் இஸ்லாமிய சகோதரர்களும் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வந்தனர்.

இந்தப் பிரச்சினைகளை கீழக்கரை சட்டப்போராளிகள் குழுமம் மூலம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சந்திரசேகரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மனுவைப் பெற்ற ஆணையர் சம்பந்தபட்டவர்களுடன் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளான ராவியத் அல்வா கடை முதல் மாட்டிறைச்சி கடை வரை உள்ள சாலை, கஸ்டம்ஸ் ரோடு, மீன் கடைத் தெரு பகுதி மற்றும் புதிய கிழக்கு தெரு பகுதிகளை நேரடியாக பார்வையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பழுதான தெரு விளக்குகளை மாற்ற உடனடியாக  உத்தரவிட்டார்.

மேலும் பல பகுதிகளில் சிதிலமடைந்து இருந்த இரும்பு முடியுடன் கூடிய மின்சார பெட்டிகளையும், பழுதாகி இருந்த கால அடிப்படையில் தானியங்கும் கருவிகளையும் மாற்ற உத்தரவிட்டார். அவருடைய துரித நடவடிக்கைக்கு பொதுமக்கள் சார்பில் நன்றிகள் பல தெரிவிக்கப்பட்டது.