Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரை கடற்கரையில் சூரிய ஒளி விளக்குகள்.. கீழைநியூஸ்-சத்தியபாதை அறக்கட்டளை உதவியுடன் கீழக்கரை டூரிஸம் (Kilakkarai Tourism) நிறுவனம் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது…

கீழக்கரை கடற்கரையில் சூரிய ஒளி விளக்குகள்.. கீழைநியூஸ்-சத்தியபாதை அறக்கட்டளை உதவியுடன் கீழக்கரை டூரிஸம் (Kilakkarai Tourism) நிறுவனம் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது…

by ஆசிரியர்

கீழக்கரை கலங்கரை விளக்கம் பகுதி பல வருடங்களாக கட்டமைப்புகள் இருந்தாலும் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையே இருந்து வந்தது.

இந்நிலையில் கீழக்கரை டூரிஸம் நிறுவனத்தின் முழு முயற்சியில் கீழக்கரை நகராட்சியில் சூரிய விளக்குகள் அமைக்க ஒப்புதல் பெறப்பட்டது. பின்னர் அந்நிறுவனத்துடன் கீழை நியூஸ் மற்றும் சத்தியபாதை அறக்கட்டளை இணைந்து அப்பகுதியில் பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சூரிய விளக்குகள் பொறுத்தும் பணி நடைபெற்று இன்று (28/06/2019) மாலை 06.00 மணியளவில், அதற்கு முறையான தொடக்க நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு கீழக்கரை கலங்கரை விளக்கம் லைட் கீப்பர் ராஜீவ் காந்தி மற்றும் கீழக்கரை டூரிஸம் நிர்வாக இயக்குனர் ரஃபீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதை தொடர்ந்து சோலார் விளக்குகளை பல்வேறு சமூக ஆர்வலர்கள் தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் மனோகரன், ஹபீப் முஹம்மது, மக்கள் டீம் காதர், மக்கள் நல பாதுகாப்பு கழகம் முகைதீன் இபுராஹீம், நாசா அமைப்பு பசீர், கீழை அஷ்ரஃப், கீழை நியூஸ்-சத்தியபாதை மாத இதழ் இணை ஆசிரியர் அப்துர் ரஹ்மான் மற்றும் இன்னும் பலர் கலந்து கொண்டனர்.

இது பற்றி கீழக்கரை டூரிஸம் தீர்வாக இயக்குனர் ரஃபீக் கூறுகையில், இத்திட்டம் கடும் முயற்சி எடுக்கப்பட்டு, கீழக்கரை நகராட்சி நிர்வாக ஒத்துழைப்புடனும், சத்தியபாதை கல்வி தர்ம அறக்கட்டளை மற்றும் கீழை நியூஸ் நிர்வாகத்தின் உதவியுடன் இந்த சூரிய ஒளி விளக்க திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  மேலும் இத்தருணத்தில் இத்திட்டத்திற்கு உதவிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்வதோடு, இன்னும் கீழக்கரை மக்கள் நலனுக்காக செய்யவுள்ள அனைத்து திட்டங்களுக்கும் பொதுமக்களும் ஆதரவு தருமாறு அன்போடு கேட்டு கொள்கிறேன். அதே சமயம் இப்பொழுது நிறுவப்பட்டுள்ள சூரிய விளக்குகளை பராமரிக்கும் பணியை கீழக்கரை டூரிஸம் மேற்கொள்ளும்” என்றார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!