Home செய்திகள் இராமநாதபுரம் – கிராமசபையும் மக்கள் பாதை தோழர்களும்

இராமநாதபுரம் – கிராமசபையும் மக்கள் பாதை தோழர்களும்

by mohan

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக சமூக விழிப்புணர்வு பிரச்சாரம் மூலம் கிராமங்களில் இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். சமூக மாற்றத்திற்கான விழிப்புணர்வு பயணத்தில் கிராமசபை , தகவல் அறியும் உரிமை சட்டம், சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாம் ஆகியவற்றிற்கு இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது..மேலும் சமூக வலைதளங்களில் கிராம சபை சார்ந்து விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது.இதன் விளைவாக தற்பொழுது நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் இளைஞர்களை பெருமளவில் நம்மால் காண முடிகிறது.இன்று 28-6-19 நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மக்கள் பாதை தோழர்கள் கலந்து கொண்டு நிறைவேற்றிய தீர்மானங்கள்:

மண்டபம் ஒன்றிய பொறுப்பாளர் ராஜ்கபூர் கலந்து கொண்டு பாம்பன் ஊராட்சிக்கு உட்பட்ட தெருக்களில் குப்பை கழிவுகளை அகற்றவும், தெருக்களில் தினந்தோறும் சேரக்கூடிய குப்பைகளை ஊழியர்களே வந்து சேகரிக்கவும், பொதுமக்களின் அவசர அழைப்பை அலட்சியம் செய்யும் மின் ஒப்பந்த ஊழியர்களை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்ற எழுத்துப்பூர்வமாக கொடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொண்டார்.

திருப்புல்லாணி ஒன்றிய பொறுப்பாளர் கிளாட்வின் முத்துப்பேட்டை ஊராட்சி கிராமசபையில் கலந்து கொண்டு தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்ட குப்பை சேகரிக்கும் இடத்தை மீட்பது குறித்து தீர்மானம் நிறைவேற்ற முயற்சித்தார். அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்ட நீரின்றி அமையாது உலகு திட்ட பொறுப்பாளர் வீரக்குமார் பட்டிணம்காத்தான் ஊராட்சி கிராமசபையில் கலந்துகொண்டார்.

தும்படைக்காகோட்டை ஊராட்சி பொன்மாரியில் நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில் இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை துணை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் மற்றும் மக்கள் பாதை தன்னார்வலர்கள் பிரபாகர்,ரகுபதி கலந்து கொண்டு தண்ணீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கான கோரிக்கை வைத்தார். மேலும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி கண்மாய் தூர்வாறுதல், ஊரணி பராமரிப்பு , ஆழ்துளை கிணறு அமைத்தல், மரக்கன்றுகள் நடுதல், மழைநீர் சேகரிப்பு சம்பந்தமான விழிப்புணர்வு பரப்புரையை அரசே மேற்கொள்ளுதல் ஆகியவற்றை தீர்மானமாக பதிவு செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது.

பல கோடி மக்கள் இருந்தும், பல லட்சம் அரசு அலுவலர்கள் இருந்தும்,பல ஆயிரம் அரசியல்வாதிகள் இருந்தும் கூட, மாற்றம் ஏற்படாததற்கான காரணம் அவர்களின் உரிமைகள் அவர்களுக்கு கூட தெரியாமல் இருப்பதே..

#உரிமை அறிவோம் #கடமையை செய்வோம் #மாற்றத்தை உருவாக்குவோம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!