Home செய்திகள் திண்டுக்கல் – கிராமசபை கூட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பு

திண்டுக்கல் – கிராமசபை கூட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பு

by mohan

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் சிறப்பாக நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பங்கேற்பு

தமிழக அரசு மே முதல் நாள் நடைபெற வேண்டிய கிராமசபை கூட்டம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்த காரணத்தால் அன்றைய தினம் நடத்தாமல் 28.06.19 இன்று கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்ததன் அடிப்படையில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டக்குழுவின் சார்பில் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பங்கேற்று மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் அன்றாட பிரச்சினைகளை தீர்க்க குரலெழுப்ப வேண்டுமென்றும், மாற்றுத்திறனாளிகள் முன்வைக்கும் கோரிக்கைகள் அனைத்தும் தீர்மானமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் சங்கத்தின் அனைத்து கிளைகளுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

அந்த வேண்டுகோளின் படி இன்று தொப்பம்பட்டி ஒன்றியத்தில் வில்வாதம்பட்டி கிராமத்தில் மாவட்ட செயலாளர் பகத்சிங் தலைமையிலும், பொருளூர் கிராமத்தில் தொப்பம்பட்டி ஒன்றிய செயலாளர் காளீஸ்வரி தலைமையிலும், ஆத்தூர் ஒன்றியத்தில் சீவல்சரகு பஞ்சாயத்தில் ஆத்தூர் ஒன்றிய செயலாளர் ஆறுமுகவள்ளி தலைமையிலும், தேவரப்பன்பட்டியில் ஒன்றிய தலைவர் வனிதா தலைமையிலும், நெல்லூரில் மாவட்டக்குழு உறுப்பினர் கண்ணன் தலைமையிலும், நிலக்கோட்டை ஒன்றியம் எத்திலோடு கிராமத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் செல்லத்துரை தலைமையிலும், ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் வேலூரில் ஒன்றிய செயலாளர் துரைராஜ் தலைமையிலும், சத்திரப்பட்டியில் ஒன்றிய தலைவர் சக்திவேல் தலைமையிலும், புதுக்கோட்டை கிராமத்தில் கிளை செயலாளர் அய்யாத்துரை தலைமையிலும், ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் கொத்தப்பள்ளி கிராமத்தில் ரெட்டியார்சத்திரம் கிளை செயலாளர் ஆறுமுகம் தலைமையிலும், எல்லப்பட்டி கிராமத்தில் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி தலைமையிலும், T.புதுப்பட்டி கிராமத்தில் ஒன்றிய தலைவர் கணபதி தலைமையிலும், சாணார்பட்டி ஒன்றியத்தில் எமக்கலாபுரம் கிராமத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் பிரான்சிஸ் சின்னப்பன் தலைமையிலும் மாவட்டம் முழுவதும் ஐநூறுக்கும் மேற்ப்பட்ட மாற்று த்திறனாளிகள் பங்கேற்றுள்ளனர்.மேலும் மாற்றுத்திறனாளிகள் சார்பில் எழுத்து ப்பூர்வமாகவும், வாய்மொழியாகவும் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் சார்பில் கிராமசபை கூட்டத்தில் வைக்கப்பட்ட கோரிக்கைகள்..

அனைத்துகிராமங்களிலும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் வெஸ்டர்ன் கழிப்பறை வசதி செய்து தர வேண்டும். பொதுக்கழிப்பறை வசதி ஏற்படுத்தி அதை தூய்மையாக பராமரிக்கபட வேண்டும்.சாலை வசதி செய்து தர வேண்டும்.குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.நூறுநாள் வேலைக்கு செல்லும் அனைவரையும் வியாழக்கிழமை வேலைக்கு வந்தால்தான் அந்த வாரம் முழுவதும் வேலை, வியாழக்கிழமை வராவிட்டால் வேலை தருவதில்லை. இந்நிலையை மாற்றி எப்பொழுது வேலைக்கு வந்தாலும் வேலை வழங்க வேண்டும்.பசுமை வீடுகள் கட்டித்தர வேண்டும்.நூறுநாள் வேலைக்கு செல்லும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிமுறைப்படி இரண்டு கிலோமீட்டருக்குள் வேலை வழங்க வேண்டும்.அனைத்து பொது இடங்களிலும் தெரு விளக்குகள் எறிவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.கழிவுநீர் தேங்காமல் ஊர் சுத்தமாக இருக்க சாக்கடை அமைத்து தர வேண்டும், ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்கும் அனைத்து சாக்கடைகளையும் தினசரி சுத்தம் செய்யம் வேண்டும்.உள்ளிட்ட கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக மாற்றுத்திறனாளிகள் அந்தந்த கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகளிடம் வழங்கியுள்ளனர். கோரிக்கைகள் அனைத்தையும் அதிகாரிகள் 15 நாட்களுக்குள் நிறைவேற்றித்தருவதாக வாக்குறுதி அளித்துள்ளனர். சங்கத்தின் சார்பில் மேற்கண்டகோரிக்கைகள் அனைத்தையும் வருகிற ஜூலை 31ம் தேதிக்குள் நிறைவேற்றித்தருமாரும் தவறும் பட்சத்தில் சங்கத்தின் தலைமையில் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் அனைத்து கிராமங்களிலும் உள்ள ஊராட்சி அலுவலகங்கள் முன்னாலும் ஊர் பொதுமக்களை திரட்டி முற்றுகை போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானமாக சொல்லப்பட்டதாக தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பில்  செல்வநாயகம் – மாவட்ட தலைவர். பகத்சிங் – மாவட்ட செயலாளர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!