Home செய்திகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை நீரை சேகரிக்க விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவுரை

ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை நீரை சேகரிக்க விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவுரை

by mohan

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடந்த விவசாயிகள் குறைதீர் நாள் இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் கூறியதாவது:மாவட்டத்தின் இயல்பான மழை அளவு 827 மிமீ. நடப்பு ஆண்டில் ஜனவரி முதல் ஜூன் வரை 11.97 மி.மீ.மழை அளவு பெறப்பட்டுள்ளது. வேளாண் பணிகளில் கோடை உழவுப்பணி மற்றும் மண் மாதிரிகள் சேகரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. பிரதமர் நுண்ணீர் பாசன திட்டம், சிறுதானியப் பயிர்கள் சாகுபடி மற்றும் மக்காச்சோள படைப்புழுவை கட்டுப்படுத்தும் முறைகள் பற்றிய விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்று வருகிறது. 404.45மெ.டன் விதைகள் அரசு மற்றும் தனியார் கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. உர இருப்பைபொருத்தமட்டில் தனியார் உரக்கடைகளில் 3,159மெ.டன், கூட்டுறவு சங்கங்களில் 1,297 மெ.டன் என 4,456மெ.டன் உரங்கள் இருப்பு உள்ளது.பிரதமரின் புதிய பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 2016- 17 ஆம் ஆண்டில் 1,20,846 விவசாயிகளுக்கு 1,01,288 ஹெக்டேர் பரப்பில் நெல் மற்றும் இதர வேளாண் பயிர்களுக்கும் மற்றும் மிளகாய் பயிருக்கும் பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக இதுவரையிலும் ரூ.528.90 கோடி பெறப்பட்டு விவசாயிகளின் வங்கிக்  கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. பிரதமரின் புதிய பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 2017- 18 ஆம் ஆண்டில் 1,23,122 ஹெக்டேர் பரப்பில் நெல் பயிருக்கு 1,52,930 விவசாயிகளும், 370 ஹெக்டேர் பரப்பில் பிற பயிர்களுக்கு 848 விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்தனர். நெல் பயிருக்கு காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக இதுவரை 1,43,751 விவசாயிகளுக்கு ரூ.478.95 கோடிஒப்புதல் பெறப்பட்டு அதில் ரூ.465.70 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. பிரதமரின் புதிய பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 2018- 19 ஆம் ஆண்டில் 1,06,984 விவசாயிகள்1,19,067 ஹெக்டேர் பரப்பில் நெல், சிறுதானியங்கள், பயறு வகை பயிர்கள், எண்ணெய்வித்து பயிர்கள். பருத்தி மற்றும் மிளகாய் போன்ற பயிர்களுக்கு பயிருக்கு பயிர் காப்பீடு செய்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின்கீழ் 2017-18-ம் ஆண்டிற்கு 43 கண்மாய்கள் தெரிவு செய்யப்பட்டு, விவசாயிகளின் பங்களிப்புடன் கண்மாய் கரைகளை பலப்படுத்துதல், மடைகளை பழுதுபார்த்தல் மற்றும் திரும்ப கட்டுதல், கூடுதல் நீர் வழிந்தோடிகளை பழுதுபார்த்தல் மற்றும் திரும்ப கட்டுதல், வரத்துக் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் மற்றும் இதர பணிகள் ரூ. 2273.90 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு 41 கண்மாய் பணிகள் முற்றிலுமாக நிறைவடைந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின்கீழ் 41 கண்மாய்கள் தெரிவு செய்யப்பட்டு, நடப்பாண்டில் (2019-2020) விவசாயிகளின் பங்களிப்புடன் கண்மாய் கரைகளை பலப்படுத்துதல், மடைகளை பழுதுபார்த்தல் மற்றும் திரும்ப கட்டுதல், கூடுதல் நீர் வழிந்தோடிகளை பழுதுபார்த்தல் மற்றும் திரும்ப கட்டுதல், வரத்துக் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் மற்றும் இதர பணிகள் மேற்கொள்ள ரூ. 2362.50 லட்சங்களுக்கு அரசின் நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு பணிகளை துவக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் முதற்கட்டமாக சிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஏக்கர் வரை நிலம் உள்ளவர்கள் என கணக்கிடப்பட்டு பயனாளிகளின் விபரம் தேர்வு செய்யப்பட்டு வந்தது. தற்சமயம் இத்திட்டம் அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டதை தொடர்ந்து சிறு,குறு விவசாயிகள், நடுத்தர விவசாயிகள் மற்றும் பெரிய விவசாயிகள் அனைவருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதுநாள் வரை இத்திட்டத்தில் 85,065 விவசாயிகள் கண்டறிந்து அவர்களது விபரம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அவர்களில் முதல் தவணை ரூ.2 ஆயிரம் வீதம் 46,595 நபர்களுக்கு ரூ.931.90 லட்சம் -இரண்டாவது தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் 45,265 நபர்களுக்கு ரூ.905.30 லட்சம் வரவு வைக்கப்பட்டுள்ளது. கூட்டுப்பட்டா மற்றும் முன்னோர்களின் பெயர்களில் உள்ள பட்டாக்களை தற்சமயம் நிலத்தின் உரிமை பெற்றுள்ள வாரிசுதாரர்களுக்கு மாற்றம் செய்திட சிறப்பு முகாம்கள் அனைத்து கிராமங்களிலும் நடைபெற்று வருகிறது.மழை நீரை சேகரிக்க அனைவரும் முனைப்புடன் செயல்பட வேண்டும் என தெரிவித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, வேளாண் துறை இணை இயக்குநர்(பொ) எல்.சொர்ணமாணிக்கம், உதவிப் பொது மேலாளர் (நபார்டு) மதியழகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) எஸ்.எஸ்.ஷேக் அப்துல்லா உள்பட அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!