இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சி அலுவலக கூட்டரங்கில் இன்று (03.01.2019) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ் தலைமையில், கீழக்கரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து நகராட்சி, ஊரக வளர்ச்சி மற்றும் வருவாய்த் துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலர்களிடத்தில் கடந்த ஜனவரி 1 2019 முதல் இதுநாள் வரை பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார். அப்போது நகராட்சி அலுவலர்களின் மூலம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட 189 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு 54 கிலோ அளவிலும், ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ஊராட்சி பகுதிகளுக்குட்பட்ட கடைகள் ஆய்வு செய்யப்பட்டு 70 கிலோ அளவிலும், வருவாய்த்துறையின் மூலம் திருப்புல்லாணி பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டு 8 கிலோஅளவிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 11,986 வீடுகளும், 2,385 கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. நகராட்சி நிர்வாகத்தின் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 17.50 மெட்ரிக் டன் அளவில் குப்பை மற்றும் கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. அந்த வகையில்ää தூய்மை காவலர்களை கொண்டு ஒவ்வொரு வீடுகளிலும் தினந்தோறும் நேரடியாக குப்பை மற்றும் கழிவுகள் சேகரிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என முறையே தரம் பிரித்து திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
அதேபோல கீழக்கரை நகராட்சி, திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் ஆகிய உள்ளாட்சி நிர்வாகங்களுக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சீரான இடைவெளியை குடிநீர் விநியோகம் செய்வதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும். அதே போல, தெருவிளக்கு பயன்பாடு குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து தெருவிளக்குகள் பழுதான பகுதிகளில் உடனுக்குடன் சீர் செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுதவர பொதுமக்களுக்கு இணைய வழியில் வழங்கப்பட்டு வரும் அடிப்படை சான்றிதழ்களை கால தாமதமின்றி உடனுக்குடன் வழங்குவதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும்.
மேலும் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பான கண்காணிப்பு பணிகளை எவ்வித தொய்வுமின்றி தொடர்ந்து விழிப்புடன் பணியாற்றிட வேண்டும். கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யும்பொழுது கவனத்துடன் அரசாணையில் தடை செய்யப்பட்டதாக அறிவித்துள்ள பிளாஸ்டிக் தாள், தெர்மகோல் தட்டுகள், தெர்மகோல் குவளைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித குவளைகள்ää பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், அனைத்து விதமான பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தேநீர் கப்புகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித குவளைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித பைகள், பிளாஸ்டிக் கொடிகள்ää நெய்யாத பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய்கள், தண்ணீர் பாக்கெட்டுகள் ஆகிய14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை மட்டுமே பறிமுதல் செய்திட வேண்டும். அதே வேளையில் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள கடைகளில் நேரடியாக ஆய்வு செய்ததோடு சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களிடத்தில் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தடை குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
இக்கூட்டத்தில் கீழக்கரை நகராட்சி ஆணையர் திருமதி தனலெட்சுமி, கீழக்கரை வருவாய் வட்டாட்சியர் திரு.சரவணன், திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி மல்லிகா, திருமதி ரோஜா உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி:- முருகன், இராமநாதபுரம்
You must be logged in to post a comment.