கீழக்கரையில் தெரு நாய்கள் உல்லாசம்.. உறக்கத்தில் நகராட்சி நிர்வாகம்… பாதிப்புகுள்ளாகிய சிறுமி..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குத்தெருவை சேர்ந்த 7வயது சிறுமி உறவினருடன் கீழக்கரை கடற்கரைக்கு சென்று விளையாடிகொண்டிருந்தபோது, அப்பகுதியில் சுற்றி திரிந்த வெறிநாய்கள் கடித்து குதறியுள்ளது.

அச்சமயத்தில் அங்கிருந்தவர்கள் சிறுமியை வெறி நாய்களிடம் இருந்து காப்பாற்றி கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.

இதே போல் இரண்டு வருடங்களுக்கு முன்பு சிறுவன் ஒருவன் நாய் கடியால் உயிர் இழந்ததை மறந்து நித்திரையில் இருக்கும் நகராட்சி நிர்வாகம் விழித்துக்கொண்டு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வேதனையுடன் கோரிக்கை வைக்கின்றனர்.

கீழை நியூஸ் SKV முகம்மது சுஐபு

உதவிக்கரம் நீட்டுங்கள்..