தமிழகத்தில் பல்வேறு இடங்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டம்….

தேனி:-

தேனியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  71வது பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஐயா அவர்களின் ஆணைகிணங்க போடி நகர மகளிர் அணி துணைச்செயலாளர் திருமதி S.வனிதா சரவணன் அவர்கள் மரியாதைக்குரிய திரு. சுருளிமுத்து 14வது பகுதி பொருலாளர் அவர்களின் முன்னிலையில் தொண்டர்கள் கேக் வெட்டி விழாவினைமிக்க மகிழ்ச்சியுடன் வெகுவிமரிசையாக விழாவை கொண்டாடினார்கள். இதில் போடி நகர் கழக மகளிர் அணி துணைச் செயலாளர் திருமதி S வனிதா சரவணன் அவர்கள் தலைமையில் தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கினார்கள்.

இராமநாதபுரம்:-

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா ராமநாதபுரம் அதிமுக., சார்பில்  நடந்தது. மாவட்ட அவை தலைவர் செ. முருகேசன் தலைமை வகித்தார். நகராட்சி முன்னாள் தலைவர் ஆர்.எஸ்.ராமமூர்த்தி, சட்டசபை தொகுதி முன்னாள் இணை செயலாளர் தஞ்சி சுரேஷ், நகர் துணை செயலாளர் ஆரிப் ராஜா, நகர் பொருளாளர் ஜெயக்குமார், அரசு வழக்கறிஞர் கரு.நா. கருணாகரன், நகர் கூட்டுறவு வங்கி துணை தலைவர் ஆடிட்டர் லோகநாதன்,  நகர் ஜெ., பேரவை செயலாளர் முத்து பாண்டி, முன்னாள் கவுன்சிலர்கள் வீரபாண்டியன், புவனேஸ்வரி, நாகஜோதி, வாசுகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உசிலம்பட்டி:-

உசிலம்பட்டி திருமுருகன் கோவில் முன் பாகஅம்மா மக்கள் முன்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 71வது பிறந்த நாள் விழாவில் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் இ.மகேந்திரன் தலைமையில், நகர் செயலாளர் குணசேகர பாண்டியன்  ஒன்றிய செயலாளர் துரை தனராஜன். வக்கீல்சேதுராமன், முன்னாள் எம்.எல்.ஏ.ஏ.கே.டி.ராஜா, ராஜா சிவப்பிரகாசம், மார்க்கெட் பிச்சை . ஏ.எம்.என்.ராஜாராம்.சுப்புராஜ், தீபா, செண்பகப்பாண்டியன் மற்றும் கட்சி நிர்வாசிகள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

கீழக்கரை:-

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அம்மா மக்கள் முன்னேற்றம் கழகம் சார்பாக தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட செயலாளர் வ.து.ந.ஆனந்த் தலைமையில்,மாநில மகளிரணி இணைச் செயலாளர் கவிதா,மண்டப ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் ஜெயசந்திரன்,நகர் செயலாளர் கே.ஆர் சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் அம்மா அவர்களின் திருவுருவபடத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.மேலும் இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினர்.

இதில் நகர் து.செயலாளர் சிவா,பொருளாளர் விஜயகுமார்,அவைத்தலைவர் நூருல் ஹக்,அம்மா பேரவை செயலாளர் ஜீவா,இளைஞரணி செயலாளர் சாகுல் ஹமீது,சுலைமான்,மாவட்ட பிரதிநிதி மகேஷ், 6வது வார்டு செயலாளர் முனீஸ்வரன்,ராமசாமி, பாண்டித்தேவர், முத்துகுமார், மீரான், சமீம்தீன், முபாரக், ஜாவித், ஹாரிஸ், மணிகண்டன், கே.ஜி.பாலமுருகன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஜெகன்ராஜ்,வினோத்குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் தோழமை கட்சி எஸ்.டி.பி.ஐ இராமநாதபுரம் தொகுதி துணைத் தலைவர் சித்திக் மற்றும் தொகுதி செயலாளர் நூருல் ஜமான்,கீழக்கரை நகர் தலைவர் கீழை அஸ்ரப்,செயலாளர் காதர்,பொருளாளர் சகுபர் சாதிக் கிழக்கு கிளை தலைவர் பகுருதீன் மற்றும் மேற்கு கிளை செயலாளர் அசாருதீன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தர்மபுரிபாலக்கோடு

அண்ணா தொழிற்சங்கம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ஜெயலலிதாவிற்கு 71 வது பிறந்தநாள் விழா அரசு போக்குவரத்து கழகம் முன்பு   பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர் தலைைமை குப்புசாமி  செயலாளர் சக்திவேல் பொருளாளர் வெங்கடேஷ் மற்றும் அண்ணா தொழிற்சங்கத்தின் செயலாளர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.