முகம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் அகில இந்திய சிலம்பு போட்டியில் சாதனை…

கோவாவில் நடைபெற்ற அகில இந்திய சிலம்பு போட்டியில் இராமநாதபுரம் முகம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் இம்தாதுல்லா சாதனை படைத்துள்ளார். கோவாவில் நடைபெற்ற அகில இந்திய சிலம்பு போட்டியில் தமிழ்நாடு, பஞ்சாப், மஹாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் கேரளாவைச் சார்ந்த 17 வயதிற்குட்பட்ட போட்டியில் சுமார் 120 மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது தனித்திறன் வெளிப்படுத்தினர்.

இதில் இராமநாதபுரம் முகம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக் பள்ளி 7ஆம் வகுப்பு மாணவன் இம்தாத்துல்லா கலந்து கொண்டு பல்வேறு மாநில சிலம்பு விளையாட்டு வீரர்களுடன் விளையாடி முதல் பரிசு பெற்று கோப்பையையும், சான்றிதழும் பெற்றனர்.

முதல்பரிசு பெற்ற முகம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக் பள்ளி மாணவன் இம்தாத்துல்லாவையும், பள்ளி சிலம்பு பயிற்சியாளர் திரு.ஹேமநாதனையும், பள்ளி தலைவர்  முஹம்மது யூசுப், பள்ளி செயலாளர் சர்மிளா, பள்ளி முதல்வர் திரு.நந்தகோபால் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டினர்.