Home செய்திகள் இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -3

கப்ளிசேட்

(உஸ்மானிய பேரரசு -30)

(கி.பி 1299-1922)

சுலைமான் அல்கானூனி அவர்கள் இஸ்தான்புல் நகரில் சுலைமானியா மஸ்ஜித் என்ற ஒரு அற்புதமான பள்ளிவாசலை கட்டினார்.

அந்த பள்ளிவாசலின் வளாகத்திற்குள்
ஒரு ஆரம்ப பள்ளிக்கூடம்,
ஒரு மேல்நிலைப்பள்ளி,
ஒருபல்கலைக்கழகம்,

ஒரு மருத்துவமனை
ஒரு
மருத்துவக்கல்லூரி,
வெளியூர்க்காரர்கள்
தங்க ஒரு இலவச தங்குமிடம்,
என்று ஒரு சிறந்த கட்டமைப்பை உருவாக்கினார்.

பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் மஸ்ஜித் நபவி பள்ளிவாசலை
எப்படி கட்டமைத்தார்களோ
அதேபோல சுலைமான் அல்கானூனி அவர்கள் சுலைமானியா மஸ்ஜிதை கட்டமைத்தார்.

சுலைமானியா பள்ளிவாசலில் பணியாற்றும் இமாம்
குர்ஆன்,ஹதீஸ், ஒளியில் புதிய சட்டங்களை பிரித்து அறிந்து உருவாக்குவது,

மற்ற வேதங்களில் அறிவு,
அன்றைய சில உலக மொழிகளில் புலமை,
விஞ்ஞானம், கணிதம், மொழியியல்
இவற்றில் புலமை உடையவராக இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.

பேரரசு முழுவதும் இதுபோன்ற தகுதிகளில் ஒரு ஆலிமை கூட தேடிப்பிடிக்க முடியவில்லை.

சுலைமான் அல்கானூனி அவர்கள் இதுபோன்ற
தகுதிகளை உள்ளடக்கிய ஆலிம்களை சுலைமானியா மஸ்ஜிதின் பல்கலைக்கழகத்தில் உருவாக்க ஏற்பாடுகள் செய்தார்.

சட்டங்களை உருவாக்க பேரரசர் சுலைமான் எடுத்த முயற்சி இவருக்கு கானூனி என்ற பட்டத்தை பெற்றுக் கொடுத்தது.

சுலைமான் அல் கானூனி அவர்கள் ஆறு மொழிகளில் புலமை பெற்று இருந்தார்.

சுலைமான் கானூனி அவர்கள் 16 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் மிகச்சிறந்த முக்கிய மன்னராக கருதப்பட்டார்.

பேரரசர் சுலைமான் அல் கானூனி அவர்களின் தலைமையில் சென்ற படைகள் ஏராளமான கிறிஸ்தவ கோட்டைகளை கைப்பற்றின.

சுலைமான் அல் கானூனியின் கடற்படை மத்திய தரைக்கடல்,
செங்கடல்,பாரசீக வளைகுடா என எல்லா பகுதிகளிலும் ஆதிக்கம் செலுத்தியது.

சுலைமான் அல்கானூனி அவர்கள் நீதித்துறையில் மாற்றங்களை தனிப்பட்ட முறையில் ஏற்படுத்தினார்.

உஸ்மானிய பாரம்பரியத்தை மீறி சுலைமான் அவர்கள் ஹர்ரெம் சுல்தான்
என்ற கிறிஸ்தவ பெண்ணை மணந்தார்.

ஆனால் அவர் முஸ்லீமாக மாறினார்.அவர் தனது சிவப்பு நிற கூந்தலால் மேற்கு ஐரோப்பாவில் ரோக்ஸெலானா
என்ற பெயரில் பிரபலமானார்.

சுலைமானின் மகனான முஹம்மது பெரியம்மை நோயால் இறந்தார்.

சுலைமானின் மற்றொரு மகனான
முஸ்தபா பேரரசில் குழப்பங்கள் ஏற்படுத்தியதால் மரணதண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

பிறகு மற்றொரு மகனான பயாஸித் பேரரசில் குழப்பங்கள் ஏற்படுத்தவே அவரது நான்கு மகன்களுடன்
தூக்கிலிடப்பட்டார்.

பேரரசின் ஆட்சியில் குழப்பங்களை ஏற்படுத்துபவர்களை
மன்னர்கள் ஒருபோதும் மன்னிப்பதில்லை.

ஆட்சியை சிறப்பாக நிர்வாகம் செய்ய இதுபோன்ற தண்டனைகளை
மன்னர்களும், அவர்களின் சட்டங்களும், ராஜதந்திரங்களாக
நியாயப்படுத்திவிட்டு
கடந்து செல்கின்றன.

மிகச்சிறந்த பேரரசராக வரலாற்றில் அறியப்பட்ட சுலைமான் அல்கானூனி அவர்கள் ஹங்கேரிக்கு படையெடுத்து சென்றபோது அந்த விபரீதம் நிகழ்ந்தது.

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!