Home செய்திகள் தேர்தல் பத்திரங்கள் சட்டம் ரத்து செய்வதற்கு 3 நாடகளுக்கு முன், சுமார் ரூ.10,000 கோடிக்கு பத்திரங்களை அச்சடிக்க அனுமதி வழங்கிய ஒன்றிய அரசு..

தேர்தல் பத்திரங்கள் சட்டம் ரத்து செய்வதற்கு 3 நாடகளுக்கு முன், சுமார் ரூ.10,000 கோடிக்கு பத்திரங்களை அச்சடிக்க அனுமதி வழங்கிய ஒன்றிய அரசு..

by Askar

தேர்தல் பத்திரங்கள் சட்டம் ரத்து செய்வதற்கு 3 நாள்களுக்கு முன், சுமார் ரூ.10,000 கோடிக்கு பத்திரங்களை அச்சடிக்க அனுமதி வழங்கிய ஒன்றிய அரசு..

தேர்தல் பத்திரங்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்வதற்கு 3 நாட்களுக்கு முன்பு, தலா 1 கோடி ரூபாய் மதிப்பிலான 10,000 தேர்தல் பத்திரங்களை அச்சிட நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்திருந்தது தெரியவந்துள்ளது.

கடந்த பிப்ரவரி 15 அன்று தேர்தல் பத்திர சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்த 15 நாள்களுக்குப் பிறகே, பத்திரங்களை அச்சிடுவதை நிறுத்தும்படி SBI வங்கியிடம் நிதி அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது.

இருப்பினும் இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயம் உற்பத்தி கழகம், ஏற்கனவே 8,350 பத்திரங்களை அச்சடித்து SBI-க்கு அனுப்பியிருந்த நிலையில், கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தான் மீதமுள்ள 1650 பத்திரங்களை அச்சிடுவதை உடனடியாக நிறுத்துமாறு நிதி அமைச்சகம் உத்தரவு வழங்கியிருக்கிறது.

RTI சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், இந்த விவரங்கள் தற்போது தெரியவந்துள்ளது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com