Home செய்திகள் இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

by Askar

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி-3

கப்ளிசேட்

உஸ்மானிய பேரரசு -26

(கி.பி 1299-1922)

உஸ்மானிய பேரரசர் முஹம்மது அல் பாதில் அவர்கள் அந்த தேவாலயத்தின் அழகால் அதிசயித்து போனார்.

ஹேஜியா ஷோபியா
(Hagiya sofiya church)
என்ற அந்த தேவாலயம் உலக புகழ் பெற்றது.

ஹேஜியா ஷோபியா என்ற ஒரு விலைமாது உலகின் மிகச்சிறந்த அழகியாக இருந்தார்.

உலகின் பணக்காரர்களுக்கும்
மன்னர்களுக்கும்
தனது அழகை மிகப் பெரிய பொருள்களுக்கு விற்றார்.

காண்ஸ்டாண்டி நோபிள் நகரில் ரோம மன்னர்
ஹேஜியா ஷோபியாவின்
அழகில் மெய்மறந்து போனார்.

அவளை திருமணமும் செய்து கொண்டார்.
அவளுக்கு மனது உறுத்தியது. தனது பாவங்களை கரைக்க
ஒரு தேவாலயம் கட்ட முடிவு செய்தாள்.

மன்னரின் உதவியாலும்,
தனது கறைபடிந்த பொருளாதாரத்
தாலும்,
அற்புதமான ஒரு தேவாலயத்தை கட்டினாள்.

தேவாலயத்தில் அற்புதமான ஓவியங்கள் வரையப்பட்டு இருந்தன.
ஏசு பிரானின் அற்புதமான ஓவியங்கள் வரையப்பட்டு மக்களை கவர்ந்தன.

மக்கள் பிற்காலத்தில்
ஹேஜியா ஷோபியாவையும்
வணங்கினார்கள்.

உஸ்மானிய பேரரசர் முஹம்மது அல்பாதில் தேவாலயத்தை சுற்றி பார்த்துவிட்டு அதன்
வரலாறுகளை அறிந்து கொண்டார்.

அந்த தேவாலயத்தின்
தலைமை குருவை அழைத்த மன்னர், இது மனிதர்களை வணங்க வேண்டிய இடமல்ல.

அண்ட சராசரங்களை படைத்து நம் எல்லோரையும் படைத்த இறைவனை வணங்கும் இடம் என்று போதித்தார்.

இதனை ஏற்றுக் கொண்ட தலைமை குரு தேவாலயத்தை
முறைப்படி மன்னரிடம் ஒப்படைத்தார்.

அந்த தேவாலயத்தை
எந்த வகையிலும் சிதைக்காமல் அந்த ஓவியங்களை திரைச்சீலைகளை வைத்து மறைக்க மன்னர் முகம்மது உத்தரவிட்டார்.

அங்கு நிர்வாகம் அமைக்கப்பட்டு முறைப்படி தொழுகைகள் நடத்த உத்தரவிடப்பட்டது.
இது போன்று அவர்களிடமிருந்து
அவர்களின் முழு சம்மதத்துடனேயே
பள்ளிவாசல்கள் உருவாயின.

பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களின் தோழர்
அபூ அய்யூப் அன்சாரி அவர்கள் முஆவியா (ரலி) அவர்களின் காலத்தில் காண்ஸ்டாண்டி நோபிள் படை எடுப்பில் முகாமிட்டு தங்கியிருந்த போது மரணமடைந்தார்.

அவரின் ஆசைப்படி,
அங்கேயே அவர் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
உஸ்மானிய பேரரசர்
முஹம்மது அல் பாதில் அவர்கள் அந்த அடக்கத்தலத்தை புதுப்பித்தார்.

அங்கு ஒரு அழகான மசூதியை கட்டினார்.
இந்த மசூதியில்தான்
முஹம்மது அல் பாதில் அவர்கள்
உஸ்மானிய பேரரசின் மன்னராக முடிசூடி பதவி ஏற்றார்.

சுல்தான்களுக்கு தனி
அடக்கத்தலம் உருவாக்கப்பட்டது.
அது சிறந்த சுற்றுலாத் தலமாக இருக்கிறது.

நிறைய கல்லூரிகள் உருவாக்கப்பட்டன.
அரசாங்கத்தின் நிதிஉதவிகள் , மானியங்கள், சலுகைகள் எல்லா மதத்தினர்களும்
சமமாக வழங்கப்பட்டன.

பேரரசர் முஹம்மது அல்பாதில் அவர்கள் ரோமை கைப்பற்ற திட்டம் தீட்டினார்.

ரோமை நோக்கி நகர படைகளையும் தயார்
படுத்தினார்.
30 வருடங்கள் மிகச்சிறந்த ஆட்சி செய்த பேரரசர் முஹம்மது அல்பாதில் அவர்கள்
மரணமடைந்தார்.

உஸ்மானிய சாம்ராஜ்யமே துக்கத்தில் துடித்து போனது.

காண்ஸ்டாண்டி நோபிள் நகரில் கிறிஸ்தவ சாம்ராஜ்யம் வீழ்த்தப்பட்டதால்
போப் கொதித்து எழுந்தார்.

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com