Home செய்திகள்மாநில செய்திகள் இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

by Askar

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -3

கப்ளிசேட்

உஸ்மானிய பேரரசு -18

(கி.பி 1299-1922)

உஸ்மானிய பேரரசர் பயாசித் சிற்றரசுகளை வெற்றி கொள்ளும்போது அதன் படைப்பிரிவுகளையும் தனது படைப்பிரிவுகளோடு இணைத்து இருந்தார்.

சிற்றரசுகளின் படைவீரர்களுக்கு சம்பளங்கள் கிடைத்ததால், உஸ்மானிய படையில் பணிபுரிந்தனர்.

தைமூரின் படையோடு இணைந்திருந்த சிற்றரசர்கள், தைமூரின் படையில் முன் அணியில் வந்தபோது,

அதனை கண்ட பயாசித்தின் படையில் இணைந்திருந்த சிற்றரசுகளின் வீரர்கள் தங்கள் மன்னர்கள் மீது உள்ள பிரியத்தால் பிரிந்து சென்று தங்கள் மன்னர்களோடு சேர்ந்து தைமூரின் படையோடு இணைந்து கொண்டனர்.

இந்நிகழ்வு போரில் உஸ்மானிய பேரரசர் பயாசித்திற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

தைமூரின் படையில் வீரர்களின் எண்ணிக்கை இதனால் திடீரென கூடியது.பயாசித்தின் படையில் வீரர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்தது.

முதல்நாள் போர் முடிந்து இரவில் போர் நிறுத்தப்பட்டது. மன்னர் பயாசித்தின் கூடாரத்தில் மன்னர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பயாசித்தின் படைவீரர்களின் எண்ணிக்கை (70,000 ) எழுபதாயிரமாக குறைந்தது.

ஆகவே அமைச்சர்களும் தளபதிகளும் பின்னடைந்து தலைநகர் சென்று விடுவோம்.

பிறகு இன்னும் படைகளை திரட்டி வலுவாக்கிக் கொண்டு மீண்டும் தைமூரோடு மோதுவோம் என்று ஆலோசனை வழங்கினார்கள்.

அதுவரை பின்னடைவயோ, தோல்விகளையோ சந்திக்காத உஸ்மானிய பேரரசு முதல் முறையாக பின்னடைவை சந்தித்தது.

ஆகவே மன்னர் பயாசித் பின்னடைந்து தலைநகர் செல்வதை ஒப்புக் கொள்ளவில்லை.

இறுதிவரை போராடுவோம் என்று சூளுரைத்தார். போரின் நடுவில், பயாசித்தை தைமூரின் வீரர்கள் சூழ்ந்து கொண்டனர்.

பயாசித் அவர்களின் மெய்க்காவல் படைகளை கொன்று குவித்து இறுதியில் பயாசித்தை கைது செய்து கைகளில் விலங்கு பூட்டி தைமூரிடம் அழைத்து சென்றனர்.

உஸ்மானிய படைகள் தோல்வியைத் தழுவியது. மிகப்பெரிய வீரர்களின் இழப்புகளும் ஏற்பட்டது.

பயாசித்தை கண்ட தைமூர் கைவிலங்கு களை கழற்றி அவரை சுதந்திரமாக இருக்க உத்தரவிட்டார்.

பயாசித்திற்கு நல்ல உணவுகளும், உடைகளும் வழங்க தைமூர் உத்தரவிட்டார்.

நன்றாக ஓய்வு கொடுத்து அடுத்த நாள் தனது அவைக்கு மன்னர் பயாசித்தை அழைத்து‌ வரச்செய்தார்.

மன்னர் பயாசித்தை தைமூர் தானே முன்வந்து கைலாகு கொடுத்து ஆரத்தழுவினார். தைமூரின் படை வீரர்களுக்கு இந்நிகழ்வு ஆச்சரியமாக இருந்தது.

அடுத்து தைமூர் இட்ட ஒரு உத்தரவு அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியத்தின் உச்சிக்கே அழைத்து சென்றது.

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!