Home செய்திகள் இஸ்லாமிய சிம்மாசனங்கள்…!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்…!

by Askar

இஸ்லாமிய சிம்மாசனங்கள்…!

பகுதி-1

கப்ளிசேட்

உமைய்யாக்களின் பேரரசு -19


( கி.பி 610-750)

உமைய்யா பேரரசு சிறப்பாக கட்டமைக்கப்பட்ட முஸ்லீம்களின் பேரரசாகும்.

ஹஸன் (ரலி) மற்றும் ஹுசைன் (ரலி) இருவரும் கூபாவிலிருந்து மதினா நகருக்கு வந்து
வாழ்ந்தார்கள்.

ஹஸன் (ரலி) அவர்கள் மிக அமைதியான
மனநிலையில் ஆன்மீக உணர்வுகளின் கலப்போடு வாழ்ந்தார்கள்.

அவர்கள் மிகக்குறைந்த வயதில் மரணமடைந்தபோது
இஸ்லாமிய சிம்மாசனம் முஆவியா (ரலி) அவர்களுடனான ஒப்பந்தப்படி ஹுசைன் (ரலி) அவர்களுக்கு உரிமையானது.

ஆனால் அன்றைய அரசியல் சூழலில் யஜீதின் அரசாட்சி வலுவாக இருந்தது.
அதனால் அந்த ஒப்பந்தம் மதிப்பிழந்து போனது.

ஹுசைன் (ரலி) அவர்களும்
அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) அவர்களும் யஜீதை ஒப்புக்கொள்ளாமல்
பைஅத் செய்யாமல் இருந்தனர்.

யஜீத் மதினாவின்
கவர்னருக்கு
செய்தி அனுப்பி
எப்படியாவது ஹுசைன் (ரலி) அவர்களிடம் ஒப்புதல் வாங்க கட்டளையிட்டார்.

மதினாவின் ஆளுநர்
மிகுந்த மரியாதையுடன்
ஹுசைன் (ரலி) அவர்களிடம் ஒப்புதல் தர வற்புறுத்தினார்.

ஆகவே ஹுசைன் (ரலி) அவர்கள் அழுத்தம் காரணமாக மக்காவிற்கு செல்ல நினைத்தார்கள்.
அங்கு சென்றால் நிறைய நபித்தோழர்கள் இருக்கிறார்கள்.
அங்கிருந்து
எதிர்ப்பை காட்டலாம் என்று எண்ணி மக்காவிற்கு சென்றார்கள்.

இதற்கிடையில் கூபாவிலிருந்து 12,000 கடிதங்கள் ஹுசைன் (ரலி) அவர்களுக்கு வந்தது.
அவர்களை கூபா வந்துவிடவும், தாங்கள் ஆதரவும், பாதுகாப்பும், அளிப்பதாகவும் கூறினார்கள்.

உண்மைநிலையை
அறிய ஹுசைன் (ரலி) அவர்கள், முஸ்லீம் இப்னு அகீல் என்ற தோழரை கூபாவிற்கு அனுப்பி வைத்தார்கள்.

கூபாவில் ஆளுநராக இருந்த நுஃமான் இப்னு பஷீர் அவர்கள்
முஸ்லீம் இப்னு அகீல் அவர்களுக்கு தங்க இடம் கொடுத்தார்.
ஹுசைன் (ரலி) அவர்களிடம் யஜீதின் அரசை எதிர்க்க வேண்டாம் என்று கூறச்சொன்னார்.

இருப்பினும் கடிதங்களின் எண்ணிக்கை மற்றும் கிலாபத் நியாயத்தின் படி தனக்கு வரவேண்டும்
என்ற எண்ணத்தில்
கூபா நகரை நோக்கி பயணிக்க ஹுசைன் (ரலி) அவர்கள் முடிவெடுத்தார்கள்.

மூத்த நபித்தோழரகள்
பலரும் போகவேண்டாம்‌
என்று தடுத்தும் கூபாவை நோக்கி தனது குடும்பத்தினர்
மற்றும் உறவினர்கள் எழுபது பேருடன் புறப்பட்டார்கள்.

ஹுசைன் (ரலி) புறப்பட்ட செய்தி யஜீதிற்கு கிடைத்தவுடன் அவர்
தனக்கு நெருக்கமானவரான
உபைதுல்லா இப்னு ஜியாத் என்பவரை கூபா கவர்னராக மாறுதல் செய்து நியமித்து ஹுசைன் (ரலி) அவர்களிடம் எப்படியோ ஒப்புதல்(பைஅத்) வாங்கிவிட பணித்தார்.

முந்தைய கவர்னர் நுஃமான் இப்னு பஷீர் அவர்கள் ஹுசைன் (ரலி )அவர்களின் தோழருக்கு தங்க ஆதரவு அளித்து இருந்தார்.ஆகவே புதிய கவர்னர்
இப்னு ஜியாத், முதல் வேளையாக பழைய கவர்னரை கொலை செய்தார்.

இதனை கண்ட கூபாவாசிகள் ஹுசைன் (ரலி) அவர்களுக்கு ஆதரவளிப்
பதிலிருந்து
அஞ்சி விலகினார்கள்.

ஹுசைன் (ரலி) அவர்களை வழியிலேயே தடுத்து நிறுத்த அம்ரு இப்னு சஃத் அவர்கள் தலைமையில் 4000 பேர் கொண்ட படையை அனுப்பினார் கவர்னர் இப்னு ஜியாத்.

இந்தப்படை கர்பலாவை சென்றடைந்தது.
அந்த மிகப்பெரிய கொடூரமும் நிகழ்ந்தது.

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!