தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் ஜன.24 அன்று தேசிய பெண் குழந்தைகள் தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சரால் பெண்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதுமைப்பெண் திட்டம், பெண்குழந்தை பாதுகாப்புத் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. பெண்கள் அனைவரும் தங்கள் முன்னேற்றத்திற்காக படிக்க வேண்டும். அதன் மூலம் சமூகத்தில் உயர்ந்த இடத்தை அடையலாம். தென்காசி மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக “பேட்டி பச்சோ பேட்டி பதோ” திட்டத்தின் கீழ் தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி கல்வித்துறை மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகுடன் இணைந்து ஜனவரி 19 முதல் ஜனவரி 23ஆம் தேதி வரையில் பெண் குழந்தைகளின் கல்வி, உரிமை, பெண் குழந்தைகளின் முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பு, குறித்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டி, போஸ்டர் போட்டி, முழக்கத்தொடர் போட்டி, பேச்சுப்போட்டி, 100 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டி (இளநிலை), 100 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டி (சூப்பர் சீனியர்), குண்டு எறிதல், என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பெண் குழந்தைகள் தங்களது தனித்திறன்களை வெளிப்படுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டது. அரசின் திட்டங்களை பயன்படுத்தி பெண் குழந்தைகள் முன்னேற வேண்டும் என தெரிவித்தார்.
போட்டிகளில் வெற்றி பெற்ற சுமார் 21 மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். மேலும், டிசம்பர் 26 வீர பால் திவாஸ் தினத்தை முன்னிட்டு குழந்தைகள் காப்பகத்தில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற 6 மாணவ மாணவிகளுக்கும் பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூகநல அலுவலர் வரவேற்புரையாற்றி திட்ட விளக்கவுரை ஆற்றினார். “பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்ட விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் தொடர்பான உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூகநல அலுவலர் செல்வி மதிவதனா, திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளாச்சி திட்டம்) ஜோஸ்பின் சகாய பிரமிளா, மாவட்ட வழங்கல் அலுவலர் அணிதா, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) .ரா. ராமசுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியர் அலுவலக பணியாளர்கள், குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர்கள், மகளிர் அதிகார மைய பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.