இஸ்லாமியா பள்ளி மாணவன் விபத்தில் பலி – தாளாளர் இரங்கல் – இன்று மாலை பள்ளி (09-04-2018) விடுமுறை..

நேற்று 8/4/2018 மாலை 06.30 மணி அளவில் ஏர்வாடி பகுதி புது மாயாகுளம் அருகே சாலையோரம் நடந்து சென்ற கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியில் 2ம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுவன் சுகாஸ் என்பவரை பின்னால் இருந்து வந்த சரக்கு வாகனம் மோதியதில் படுகாயமடைந்து, இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் பரிதாபமாக இறந்து விட்டார்.

மாணவனின் ஆத்மா சாந்தமடைய இறைவனை பிரார்த்திப்பதோடு, குழந்தையை இழந்து வாடும் குடும்பத்தினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை பள்ளி நிர்வாகம் சார்பாக தெரியப்படுத்திக்கொள்கிறோம்.

இறப்பு செய்தி காலையில் தாமதமாக தெரியவந்ததால் பள்ளிக்கு இன்று பகல் (09-04-2018) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . இவ்வாறு பள்ளியின் தாளாளர் இபுராஹிம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..