கீழக்கரையில் இஸ்லாமிய கல்வி சங்கத்துடன் மதரஸாக்கள் இணைந்து நடத்தும் கோடை கால இஸ்லாமிய எழுச்சி முகாம்

கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கம், அல் மதர்ஸத்துர் ராழியா மற்றும் அல் மதர்ஸத்துல் அஸ்ஹரிய்யா இணைந்து நடத்தும் இஸ்லாமிய சிறுவர்களுக்கான கோடைகால இஸ்லாமிய எழுச்சி முகாம் எதிர்வரும் ஏப்ரல் 25 முதல் மே மாதம் 20 ஆம் தேதி வரை நடை பெற இருக்கிறது. இந்த முகாமில் சேர்வதற்கான விண்ணப்ப படிவங்கள் ஏப்ரல் 10 முதல் பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.