“நாளைய உலகம் நமதாகட்டும்”- தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் நடத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி..

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்  சார்பாக முஸ்லிம் முஹல்லாக்களில்  உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியின் நோக்கம் வளரும் தலைமுறைக்கு முறையான வழிமுறைகளை வழங்கி, வழிகாட்டுமலும் கொடுத்து சிறந்த முஸ்லிம் சமுதாயமாக உருவாக்குவதாகும்.

இந்நிகழ்ச்சி மிக குறிப்பாக 12ம் வகுப்பு தேர்வு எழுதியிருக்கும் மாணவச் செல்வங்களுக்கு பலன் உள்ளதாக இருக்கும். ஆகையால் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சி “நாளைய உலகம் நமதாகட்டும்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக நடத்தப்படுகிறது. இத்துடன் நடைபெற இருக்கும் ஊரின் விபரங்கள் தரப்பட்டுள்ளன.

மேலும் மற்ற ஊர்களிலும் இந்நிகழ்ச்சியை மாணவச் செல்வங்களின் நன்மை கருதி வலியுறுத்தப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு நிகழ்ச்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் க.பைசல் அஹமது எனும் சகோதரரை 9944122616 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

1 Comment

Comments are closed.