Home செய்திகள் ராமநாதபுரத்தில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்கும் திட்டம் அறிமுகம் !அடுத்த 3 ஆண்டுகளில் 41 ஆயிரம் வீடுகளுக்கு வழங்க திட்டம்..!!

ராமநாதபுரத்தில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்கும் திட்டம் அறிமுகம் !அடுத்த 3 ஆண்டுகளில் 41 ஆயிரம் வீடுகளுக்கு வழங்க திட்டம்..!!

by Baker BAker

இந்தியாவின் நகர எரிவாயு வினியோகத் தொழில்துறையில் முன்னணி நிறுவனமாக தனியார் ஏஜிகபி பிரதம்)நிறுவனம் அனைத்து மக்களுக்கும் குழாய் மூலம் இயற்கை எரிவாயுவை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தீவிரமாக பணியாற்றி வருகிறது. அந்த வகையில் பசுமையான மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்கும் விதமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கான அதன் லட்சியத் திட்டங்களை இன்று வெளியிட்டது. ராமேஸ்வரம், பரமக்குடி மற்றும் ராமநாதபுரத்தில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்கும் விரிவாக்க திட்டம் குறித்து இந்நிறுவனம் இன்று அறிவித்தது. இதன் மூலம் அடுத்த 8 ஆண்டுகளில் 41 ஆயிரம் வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயுவை வழங்க இந்நிறுவனம் இலக்கு நிரணயித்துள்ளது. மேலும், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியத்தின் தேசிய உள்நாட்டு குழாய் மூலம் இயற்கை வாயு இயக்கத்தை மே 3ம் தேதி வரை நீட்டித்து. ராமநாதபுரத்தில் உள்ள வீடுகளுக்கு இந்த எரிவாயு வழங்கும் பணியை ஏஜி.பி பிரதம் துரிதப்படுத்தி உள்ளது. இந்த இயக்கத்தின் கீழ் வழங்கப்படும் சிறப்புத் திட்டத்தில் ஒரு மாத இலவச எரிவாயு செக்யூரிட்டி டெபாசிட் இல்லாத பூஜ்ஜிய பதிவு கட்டணம், வட்டியில்லா தவணை முறை வசதி மற்றும் பூஜ்ஜிய வாடகைக் கட்டணங்கள் ஆகியவற்றையும் ஏஜிஃபி பிரதம் வழங்குகிறது புதிய நுகர்வோருக்கு பதிவுக் கட்டணத் தொகையான 354 ரூபாய் மற்றும் செக்யூரிட்டி டெபாசிட் தொகையான 6000 ரூபாயை தள்ளுபடி செய்வதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த எரிவாயுவை பயன்படுத்தும்போது நுகர்வோர் சாதாரண எல்பிஜி சிலிண் சிலிண்டர்களுடன் ஒப்பிடுகையில் 30 சதவீத தொகையை சேமிக்க முடியும். மேலும், போக்குவரத்து பிரிவில் குறைந்த செலவில் தேவைக்கேற்ப செய்ய பெட்ரோலிய பொருட்களுக்கு மாற்று எரிபொருளாக சிஎன்ஜியை வினியோகிக்க இந்நிறுவனம் சிஎன்ஜி நிலையங்களை நிறுவியுள்ளது பல்வேறு முக்கிய இடங்களில் அடுத்த 8 ஆண்டுகளில் மேலும் 6 சிஎன்ஜி நிலையங்களை திறக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கூடுதலாக திறக்கப்படும் இந்த மையங்கள் மூன்று சக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள், கார்கள், சிறிய வணிக வாகனங்கள், இலகுரக வர்த்தக வாகனங்கள் மற்றும் பஸ்களுக்கு சிஎன்ஜியை தடையின்றி வழங்கும். வாகனங்களில் சிஎன்ஜி மற்றும் வீடுகளில் குழாய் இயற்கை வாயுவை பயன்படுத்துவதன் மூலம் இப்பகுதியில் கார்பன் மற்றும் மாசு வெளியேற்றம் வெகுவாக குறைவதோடு சிறந்த சுற்றுச்சூழலுக்கு தனது சிறப்பான பங்களிப்பை ஏஜிஃபி பிரதம் வழங்கும். (AG&P pratham )ஏஜி&பி பிரதம் நிறுவனத்தின் ராமநாதபுரம் மண்டலத் தலைவர் எசக்கிமுத்து பூமாரி கூறுகையில், ராமநாதபுரம் பகுதியில் விரிவான வளர்ச்சியை ஏற்படுத்த நாங்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகிறோம். சுற்றுச்சூழலுக்கு நிலையான மற்றும் பொருளாதார ரீதியாக சாத்தியமான பெட்ரோலிய பொருட்களுக்கு மாற்றாக உள்ளூர் சமூகத்திற்கு இயற்கை எரிவாயுவை சீராக வழங்குவதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இப்பகுதியில் உள்ள மக்களுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயுவை வழங்க 11 கிமீ ஸ்டீல் பைப்லைன் மற்றும் 140 கிமீ மீடியம் டென்சிட்டி பாலிஎதிலீன் பைப்லைனை பதித்துள்ளோம். இதன் மூலம் முதல் கட்டமாக நாங்கள் இப்பகுதியில் உள்ள மொத்தம் 50 ஆயிரம் வீடுகளில் 10 ஆயிரம் வீடுகளுக்கு எளிதாக குழாய் இயற்கை எரிவாயுவை வழங்க முடியும். ராமநாதபுரத்தின் உள்பகுதிகளில் வலுவான உள்கட்டமைப்புகளை உருவாக்கி, உள்ளூர் தொழில்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக. எங்களின் இந்த முயற்சியானது இம்மாவட்டத்தில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதையும், அவர்களின் மாதாந்திர எரிபொருள் செலவினங்களை 30 சதவிதம் வரை குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், குழாய் இயற்கை எரிவாயு இணைப்புகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, வாகனங்களுக்கான மாற்று எரிபொருளாக சிஎன்ஜி-யை எங்கள் நிறுவனம் ஊக்குவித்து வருகிறது. சிஎன்ஜி மூலம் இயங்கும் வாகனங்களை வாங்கும் உரிமையாளர்களுக்கு எரிபொருள் செலவானது 45 சதவிதம் வரை குறைகிறது. சிஎன்ஜி-யை பயன்படுத்துவதன் மூலம் அது வாகனங்களின் என்ஜினை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதன் காரணமாக அதிக மைலேஜை அந்த வாகனங்கள் தருகின்றன. மேலும் பராமரிப்பு செலவுகளும் வெகுவாக குறைகின்றன. பொருளாதார நன்மைகளுக்கு அப்பால், வாகனங்களில் சிஎன்ஜியை பயன்படுத்தும்போது அதில் இருந்து குறைந்த அளவு கார்பன் மட்டுமே வெளியேறுகிறது. எனவே சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் சிஎன்ஜி முக்கிய பங்களிக்கிறது. இந்த முன்முயற்சிகள் வரும் 2030-ம் ஆண்டிற்குள் நாட்டின் எரிசக்தி தேவையில் இயற்கை எரிவாயுவின் பங்கை 15 சதவீதமாக உயர்த்தும் மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கின்றன. சுற்றுச்சூழலில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துதல் மற்றும் ராமநாதபுரத்தில் வசிக்கும் மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் இந்நிறுவனம் உறுதியாக உள்ளது என தெரிவித்தார்.

TS 7 Lungies

You may also like

Leave a Comment

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!