Home செய்திகள் வருமான வரி கணக்கீடு, குழப்பங்களை தீர்க்க தமிழக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்..

வருமான வரி கணக்கீடு, குழப்பங்களை தீர்க்க தமிழக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்..

by Askar

வருமான வரி கணக்கீடு, குழப்பங்களை தீர்க்க தமிழக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்..

IFHRMS மென்பொருளில் வருமான வரி பிடித்ததில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதை தாங்கள் அனைவரும் அறிவீர்கள்

இது நிதித்துறை மற்றும் கருவூலக் கணக்கு துறையின் கவனத்திற்கு மாநில அமைப்பின் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பழைய முறையில் வருமான வரி செலுத்துபவர்களுக்கு 20% தானாக ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. அவர்களுடைய வீட்டு கடன், ஆயுள் காப்பீடு ,இதர சேமிப்புகள் கணக்கில் கொள்ளப்படாமல் உள்ளன .

ஆகவே அவற்றை கணக்கில் கொள்ளவும் கட்டாய பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும் என்று அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது .

அது குறித்த அரசு தரப்பிலிருந்து தகவல்கள் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கிறோம். குளறுபடிகள் களையப்பட்ட பிறகு ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம.

மாநில மையம்_ தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு!!

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com