55
இராமநாதபுரம், ஜன.7 – இராமநாதபுரத்தில் டிஎன்பிஎஸ்சி எழுத்துத்தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த பொறியியல் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெற்றது. ராமநாதபுரம் டி.டி.விநாயகர் மேல்நிலைப்பள்ளி, ஏ.வி.எம்.எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முஹமது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆல்வின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 மையங்களில் நடந்தது. காலை, மாலை என இரு பிரிவுகளாக நடந்த தேர்விற்கு 2,211 பேர் விண்ணப்பித்ததில் 1,468 பேர் எழுதினர். தேர்வு மையத்தில் உட்கடமைப்பு, அடிப்படை வசதிகள், காவல்துறை பாதுகாப்பு, கண்காணிப்புக்குழு மூலம் ஒளிப்பதிவு குறித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆய்வு செய்தார்.
You must be logged in to post a comment.