திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சாராயத்தில் விஷத்தை கலந்து கொலை செய்த வழக்கில் கைதானவர்கள் மீது குண்டர் சட்டம் ..

நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளபட்டி கிராமத்தில் கடந்த மாதம் 15.12.18ம் தேதி விஷம் கலந்த மதுவை உட்கொண்டதால் முருகன் மற்றும் சமயன் ஆகிய இருவர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் தமிழ்வாணன், ராஜலிங்கம், கிருஷ்ணமூர்த்தி என்ற வைத்தியர் கிருஷ்ணமூர்த்தி, செந்தில்குமார் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய 5 பேரை அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவர்கள் 5 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் அவர்களின் பரிந்துரையின் படி மாவட்ட ஆட்சியர் வினய் 5 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

செய்தி:- அஸ்கர், திண்டுக்கல்