பள்ளி மாணவ, மாணவிகளோடு பொங்கல் கொண்டாடிய கீழக்கரை ரோட்டரி சங்கம்..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள சின்னபாளையரேந்தலில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரோட்டரி சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாணவ, மாணவிகளுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் நோட்டு, புத்தகங்கள், பேனா ஆகியவை வழங்கப்பட்டது.

மேலும் இவ்விழாவை பட்டயதலைவர் பேராசிரியர் அலாவுதீன் துவக்கி வைக்க, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பாக்கியலெட்சுமி வரவேற்புரை நிகழ்த்த ரோட்டரி சங்க தலைவர் சுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த  விழாவில் ரோட்டரி சங்க செயலாளர் ஹசன், பொருளாளர் முனியசங்கர், வட்டார மருத்துவ அலுவலர் ராசிக்தீன், முன்னாள் தலைவர் பாலசுப்பிரமணியன், மரியதாஸ், சிவகார்த்திக்கேயன் மற்றும் பள்ளி ஆசிரிய, ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

நன்றி:- Sunrise Digital Studio, klk