மது பாட்டில்கள் பதுக்கிய வாலிபர் கைது..

இராமநாதபுரம் அருகே வாலாந்தரவையில் சட்ட விரோத மது விற்பனை நடப்பதாக கேணிக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து கேணிக்கரை போலீசார் வாலாந்தரவை பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது மது பாட்டில் விற்றுக் கொண்டிருந்த வாலிபர் சிக்கினார். பின்னர் விசாரணையில், அவர் வாலாந்தரவை கிழக்கு தெரு ஆறுமுகம் மகன் ராஜூ, 25 என தெரிந்தது. அதைத் தொடர்ந்து ராஜூவை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.