தேவர் நினைவிடத்தில் 5 பேர் உண்ணாவிரதம்…

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு எதிரே உள்ள தியான மண்டபத்தில் சீர்மரபினர் நலச் சங்கத்தினர் காலவரையற்ற உண்ணாவிரதம் துவங்கினர்.

கடந்த 30/07/1979 ல் தமிழக அரசு பிறப்பித்த அரசு ஆணை 1310 திரும்ப பெறக்கோரி சீர்மரபின் மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி சீர்மரபினர் நலச்சங்க மாநில செயலாளர் கோபிநாதன் தலைமையில் 5 பேர் இன்று ( 20/09/18) மதியம் 12.00 மணி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.