மண்டபம் ஒன்றியம் காந்திநகர் நடுநிலைப்பள்ளியில் தூய்மை பாரதம் நிகழ்ச்சி..

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் காந்திநகர் நடுநிலைப்பள்ளியில் தூய்மை பாரதம்,  தூய்மை பள்ளி 2018 திட்டத்தின் கீழ் சுகாதார விழிப்புணர்வு பிரசார பேரணி மற்றும் களப்பணி நடந்தது.

மண்டபம் வட்டார கல்வி அலுவலர் ரவிக்குமார் பேரணியை துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியை உமாதேவி தலைமை வகித்தார். ஆசிரியர்கள் பாலமுருகன், அப்துல்காதர், பூங்கொடி, முத்துக்குமார், நிர்மலா, அருளம்மாள், நந்தினி மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் இணைந்து பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தினர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.