Home செய்திகள்உலக செய்திகள் புகழ்பெற்ற பிரெஞ்சு இலக்கியவாதி விக்டர் ஹியூகோ பிறந்த தினம் இன்று.(பிப்ரவரி 26,1802)

புகழ்பெற்ற பிரெஞ்சு இலக்கியவாதி விக்டர் ஹியூகோ பிறந்த தினம் இன்று.(பிப்ரவரி 26,1802)

by mohan

ஹியூகோ பிரான்சின் பெசன்கான் என்ற இடத்தில் பிப்ரவரி 26, 1802ல் பிறந்தார். இவரின் தந்தை ஒரு இராணுவ அதிகாரி. மாவீரன் நெப்போலியனின் கீழ் ஜெனரலாகப் பணி புரிந்தவர்.பள்ளிக்கல்வி முடித்து சட்டம் பயின்ற இவருக்கு இலக்கியத்தில் தான் ஆர்வம் இருந்தது. இதற்கு இவரது அம்மாவின் முழு ஆதரவும் இருந்தது.இவர் சொந்தமாக ஒரு பத்திரிகையைத் தொடங்கித் தனது கவிதைகளையும் தனது நண்பர்களின் எழுத்தையும் அதில் வெளியிட்டார். தனது முதல் கவிதை நூலை 1821-ல் வெளியிட்டார். முதல் நாவல் 1823-ல் வெளிவந்தது. தொடர்ந்து எண்ணற்ற நாடகங்களும் வெளிவந்தன.

இவரது கவிதைகளில் லே கன்டம்பிளேஷன்ஸ் மற்றும் லா லெஜன்டே லே சீக்ளெஸ் ஆகியவை மிகவும் போற்றப்பட்டன. லே மிஸரபிள்ஸ், நோட்ரே-டேம் டி பாரீஸ் ஆகிய நாவல்கள் மிகவும் புகழ் பெற்றவை.இளம் வயதில் தொடங்கிய இவரது இலக்கியப் பயணத்தில் பல பரிசுகளையும் பெற்றுள்ளார். 20-க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகள், 10-க்கும் மேற்பட்ட நாடகங்கள், நாவல்கள், பயணக் கட்டுரைகள் என இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தனி முத்திரை பதித்தார்.ஹியூகோவின் எழுத்துக்கள் எளிய மக்களைப் பற்றியும், அவர்களின் வாழ்க்கை முறை, துயரங்கள், வேதனைகளை எடுத்துக் கூறின. முறையான வரிவிதிப்பு, ஏழைகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் சமூக மாற்றங்கள், யுத்தமற்ற அமைதியான வாழ்க்கை ஆகியவற்றுக்காகவும் மரண தண்டனைக்கு எதிராகவும் போராடினார்.

எழுத்தாளராக மட்டுமின்றி நாடக ஆசிரியர், கட்டுரையாளர், கவிஞர், அரசியலாளர் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர் போன்ற பல்துறை வித்தகராக விளங்கினார்.தென் அமெரிக்க முதற்குடிமக்கள் பின்புலம் உள்ள முதல் ஜானாதிபதி இவர் ஆவார். இவர் ஒரு இடது சாரித் தலைவர் ஆவார். இவரது தத்துவ பின்புலத்தில், தலைமையில் வெனிஸ்வேலாவில் அமைந்த புரட்சியை பொலிவரியன் புரட்சி என்று குறிப்பிடுவர். பொலிவேரியப் புரட்சியின் தலைவராக இவர் மக்களாட்சி சோசியலிசம் இலத்தீன் அமெரிக்க நாடுகளின் ஒருங்கிணைப்பு மற்றும் வல்லதிகார எதிர்ப்பு போன்ற கோட்பாடுகளின் தனது சொந்த பார்வையை பரப்பி வந்தவர். இவர் தனது சமகால முதலாளித்துவத்தையும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் வெளியுறவுக் கொள்கையையும் கடுமையாக எதிர்த்து வந்தவர். உலகில் உள்ள முற்போக்கு சக்திகளுக்கு உத்வேகமூட்டிய சாவேஸ் இன்றில்லை. அவர், போரற்ற உலகம், பசி, நோய், கல்லாமை இல்லாத சமத்துவ ஜனநாயக சமூகத்திற்காக போராடினார்.

அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளை தன்னுடைய படைப்புகளில் பிரதிபலித்தார்.இவரது நாடகங்கள் திரைப்படங்களாகவும், மேடை நாடகங்களாகவும் அரங்கேறின.மார்ச் 5, 1885ஆம் ஆண்டு, தனது 83ஆவது வயதில் இவுலகை விட்டு பிரிந்தார்.இறக்கும் தருவாயில் சொத்தில் பெரும் பகுதியை ஏழைகளுக்காக ஏழை மக்களின் நலத்திட்டங்களுக்காக எழுதி வைத்தார்.இவரது இறுதி ஊர்வலத்தில் 2 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!