கீழக்கரையில் ரோட்டரி சங்கம் சார்பாக ஹோமியோபதி மருத்துவ முகாம்..

இன்று (20/12/2018) காலை கீழக்கரை ரோட்ரி சங்கத்தின் சார்பாக லெட்சுமிபுரம் சமுதாய கூடத்தில் இலவச ஹோமியோபதி பொது மருத்துவமுகாம் நடை பெற்றது.

இந்த மருத்துவ முகாமில்  டாக்டர் K.S.சிவகார்த்திகேயன் மருத்துவ ஆலோசனைகளும்,  தேவையான மருந்துகளும்  இலவசமாக வழங்கினார். இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.  இந்த நிகழ்ச்சிக்கு கீழக்கரை ரோட்டரி சங்க பட்டைய தலைவர் டாக்டர் முன்னிலை வகித்தார்.

மேலும் கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் சுந்தரம், பொருளாளர் முனியசாமி, செயலாளர் செய்யது முஹம்மது ஹசன் மற்றும் ரோட்டரி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Photo Source:- Mani Book Binders